Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பாலத்தைக் கடந்து சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்திய வாலபி கங்காரு!

சிட்னி துறைமுகப் பாலத்தில் துள்ளிக் குதித்துச் சென்ற வாலபி (wallaby) எனும் கங்காரு இனத்தைச் சேர்ந்த சிறிய வகை விலங்கு, சிட்னி மக்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
பாலத்தைக் கடந்து சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்திய வாலபி கங்காரு!

(படம்: NSW Police Force)

சிட்னி துறைமுகப் பாலத்தில் துள்ளிக் குதித்துச் சென்ற வாலபி (wallaby) எனும் கங்காரு இனத்தைச் சேர்ந்த சிறிய வகை விலங்கு, சிட்னி மக்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

1,150 மீட்டர் நீளம் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிகுந்த அந்தப் பாலத்தின் தடங்களைக் கடந்து நகரத்தின் மையப் பகுதிக்குச் சென்றது வாலபி.

இசைப் பள்ளிக்கு அருகில் காவல்துறை அதிகாரிகள் அதைப் பிடித்தனர்.

அருகிலிருந்த விலங்கியல் தோட்டத்திற்கு வாலபி கொண்டுசெல்லப்பட்ட்து.

இணையவாசிகளைக் குதூகலப்படுத்தியிருக்கிறது இந்தக் குட்டிக் கங்காரு. அதைப் பற்றி இணையத்தளங்களில் பல பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

பாலத்துக்குப் பக்கத்தில் உள்ள கோல்ஃப் (golf) ஆடுகளத்திலிருந்து 'வாலபி' வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்