Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறீர்களா? என்ன செய்யலாம்?

தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறீர்களா? என்ன செய்யலாம்?

வாசிப்புநேரம் -

தண்ணீர் அருந்துவதன் அவசியத்தை அறிந்திருந்தாலும் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நாம் அதைக் குடிக்க மறந்துவிடுவது வழக்கமானது.

தொடர்ந்து நீர் குடிப்பதை நாம் எப்படி பழக்கமாக ஆக்கிக் கொள்ளலாம்? இதோ சில பரிந்துரைகள்!

  •  தண்ணீரை அவ்வப்போது பருக வேண்டும் என்பதை ஞாபகமூட்டும் செயலிகள் உள்ளன. அவற்றைக் கைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 'தண்ணீர் குடிக்கவேண்டும்!' என்ற அறிவிப்புகளின் மூலம், செயலி அவ்வப்போது நினைவூட்டும்.
  • ஒரு நாளில் தண்ணீரை எப்போதெல்லாம் குடிக்கலாம் என்பதை தண்ணீர் புட்டியில் குறித்துக்கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். புட்டியில் இருக்கும் இந்த அடையாளக் குறிப்புகளைப் பார்த்துக்கொண்டே இருந்தால் தண்ணீரைக் குடிக்க மறக்கமாட்டீர்கள்!
  • காரமான உணவுகளை உண்ணுங்கள். அவ்வாறு சாப்பிடும்போது காரத்தைத் தணிக்க தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே ஏற்படும்.
  • காப்பி, தேனீர் என்று 'காஃபின்' அதிகமுள்ள பானங்களை அருந்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதே மாதிரி, சர்க்கரை அளவு அதிகமுள்ள பானங்களையும் குறைந்த அளவில் பருகலாம். அதற்குப் பதிலாக, தண்ணீரைக் குடியுங்கள்.
  • புதினா, எலுமிச்சைப்பழத் துண்டு, தர்ப்பூசணிப்பழத் துண்டு, வெள்ளரிக்காய் துண்டு ஆகியவற்றைத் தண்ணீருடன் புட்டியில் சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் அருந்தும் பழக்கம் மேலும் சுவையுள்ளதாக இருக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்