Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இதயத்தில் படியும் கொழுப்பைக் குறைப்பதற்குப் பளு தூக்கும் பயிற்சியே சிறந்தது: ஆய்வு

உடற்பருமன் பிரச்சினை உள்ளவர்கள், உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்கப் பலவிதமான பயிற்சிகளைச் செய்வதுண்டு.

வாசிப்புநேரம் -

உடற்பருமன் பிரச்சினை உள்ளவர்கள், உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்கப் பலவிதமான பயிற்சிகளைச் செய்வதுண்டு.

நீண்ட தூரம் நடப்பது, ஓடுவது, நீச்சல், உணவுக் கட்டுப்பாடு-என்று பலவற்றை அவர்கள் செய்தாலும் இதயத்தில் படியும் கொழுப்பைக் குறைப்பதில் பளு தூக்கும் பயிற்சியே சிறந்தது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஆய்வு சிறிய அளவில் நடத்தப்பட்டதாகவும் அதில் 32 பேர் கலந்துகொண்டதாகவும், JAMA Cardiology எனும் சஞ்சிகை குறிப்பிட்டது.

இதயத்தில் படியும் கொழுப்பினால், இதய நோய்கள் உருவாகின்றன.

அந்தக் கொழுப்பைக் குறைப்பதில் மற்ற பயிற்சிகளை விட பளு தூக்குதல் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டது.

ஆய்வின் தகவல் சற்று அதிர்ச்சியளிப்பதாகவும், கொழுப்பு குறைவதற்கான மருத்துவ ஆதாரங்கள் அந்த ஆய்வில் முழுமையாக இல்லை என்றும் சில மருத்துவர்கள் கூறியுள்ளனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்