Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அடிக்கடி சந்தைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க...நிபுணர் கூறும் வழிகள்

ஈரச் சந்தைகளிலிருந்து உடனுக்குடன் பொருள்களை வாங்கி அவற்றைச் சமைத்துச் சாப்பிடுவதில்தான் அதிகச் சத்து உண்டு என்ற மனப்போக்கு பலரிடையே உள்ளது.

வாசிப்புநேரம் -

ஈரச் சந்தைகளிலிருந்து உடனுக்குடன் பொருள்களை வாங்கி அவற்றைச் சமைத்துச் சாப்பிடுவதில்தான் அதிகச் சத்து உண்டு என்ற மனப்போக்கு பலரிடையே உள்ளது.

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் ஈரச் சந்தைகளுக்குச் செல்வதை வாரம் ஒரு முறைக்குக் குறைத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் ஆலோசனை கூறியுள்ளது.

வாரம் ஒரு முறை ஈரச் சந்தைகளுக்குச் சென்றாலும் வாங்கும் உணவுப் பொருள்களின் சத்துகள் குறையாமல் அவற்றை வாரம் முழுவதும் பயன்படுத்த முடியுமா என்ற குழப்பம் சிலருக்கு இருக்கலாம்.

அதற்கு ஒரு சில வழிகளைப் பகிர்ந்துகொள்கிறார் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின், உணவுப் புத்தாக்கம், வளங்கள் நிலையத்தின், உணவியல் வல்லுநர் கெரோலின் ஸ்டீஃபன்ஸ்.

சந்தைகளுக்குச் செல்லும் முன்...

  • வாரத்தில் என்னென்ன சமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்குத் தேவைப்படும் பொருள்களைப் பட்டியலிடலாம்.
  • தேவைப்படும் பொருள்களை மட்டுமே வாங்கினால் அவை வீணாவதைத் தவிர்க்கலாம். அடிக்கடி ஈரச் சந்தைகளுக்குச் செல்வதைக் குறைக்கலாம்.

சந்தையிலிருந்து வந்த பின்னர்...

  • சந்தையிலிருந்து திரும்பியவுடன் காய்கறிகள், பழங்களைக் குளிர்ப்பதனப் பெட்டியில் வைக்கவேண்டும். வெங்காயம், பூண்டு, தக்காளி, கிழங்கு, பப்பாளி, மாம்பழ வகைகளைத் தவிர மற்றவற்றைக் குளிர்பதனப் பெட்டியில் வைப்பதால் அவற்றின் ஆயுள் கூடுகிறது.
  • காய்கறிகளைக் கழுவி, துடைத்துவிட்டு அவற்றைப் பிளாஸ்டிக் பைகளில் போடவேண்டும். காற்றோட்டம் உள்ள வகையில் பைகளில் துளைகள் இடுவதாலோ பைகளைக் கட்டாமல் வைத்திருப்பதாலோ காய்கறிகளில் நீர் கசிவது குறையும்.
  • கீரை வகைகளை Kitchen Towel டிஷ்யூ தாள்களில் மடித்து வைப்பதால் அவை வாடாமல் இருக்கும்.
  • குளிர்பதனப் பெட்டிகளில் உள்ள Chiller Boxஇல் வைப்பதால் காய்கறிகள், பழங்கள் வாரம் முழுவதும் முத்திப்போகாமல் இருக்கும்.
  • வெளியில் வைத்திருக்கும் பழங்கள் பழுத்துவிட்டால், அவற்றில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் குறையாமல் இருக்க அவற்றைக் குளிர்ப்பதனப் பெட்டியில் வைக்கலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்