Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆர்க்டிக் வட்டாரத்தின் பனி உருகினால் என்ன நடக்கும்?

ஆர்க்டிக் வட்டாரத்தின் பனி படர்ந்த சுற்றுப்புறம், 2060ஆம் ஆண்டுக்குள் மழை பொழியும் வட்டாரமாக மாறக்கூடும் என்று Nature Communications ஆய்விதழில் புதிய தகவல் இடம்பெற்றுள்ளது. 

வாசிப்புநேரம் -

ஆர்க்டிக் வட்டாரத்தின் பனி படர்ந்த சுற்றுப்புறம், 2060ஆம் ஆண்டுக்குள் மழை பொழியும் வட்டாரமாக மாறக்கூடும் என்று Nature Communications ஆய்விதழில் புதிய தகவல் இடம்பெற்றுள்ளது.

பூமிப்பந்தின் வெப்பம் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிவேகமாக அதிகரித்துவருகிறது. NASA அளித்துள்ள விவரத்தின்படி, 2000ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, உலகின் ஆக வெப்பமான வருடங்களில் 15 ஆண்டுகள் பதிவாகியுள்ளன.

2018ஆம் ஆண்டில் ஆர்க்டிக் கடலின் பனித்தகடுகளின் அளவு, இரண்டாம் ஆகக் குறைவானதாக இருந்தது.

சரி நமக்கென்ன... ஆர்க்டிக் வட்டாரம் மிகத் தொலைவில் உள்ளதே... நம்மைப் பாதிக்காது

எனப் பலரும் யோசித்துக்கொண்டிருக்கலாம். அது நம்மையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்களும் ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.

ஆர்க்டிக் வட்டாரம் என்பது குளிர்பதனப் பெட்டியைப் போன்றது!

குளிர்பதனப் பெட்டியிலுள்ள ஐஸ் கட்டி திடீரென உருகினால் நமக்கு எப்படிக் கவலை வருமோ, அதைப்போலவே உலகின் பனித்தகடுகள் உருகும்போதும் நாம் கவலைப்பட வேண்டும் என்கிறார் Pennsylvania State பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானிலை நிபுணர் திரு. மைக்கல் மன் (Micheal Mann)

பனித்தகடுகள் உருகும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள்?

  • உயரும் கடல் மட்டம்
படம்: AFP/Ted ALJIBE

படம்: AFP/Ted ALJIBE

பனித்தகடுகள் உருகும்போது, அதிலிருந்து வரும் நீர், கடலில் சேர்ந்து கடல்மட்டத்தை உயர்த்துகிறது. அதனால் கரையோரங்களில் இருக்கும் சமூகங்கள் பெரிய அளவில் பாதிப்படையலாம். அவற்றில் வெள்ளம் ஏற்படக்கூடும், பல இடங்கள் நீருக்கடியில் மூழ்கிவிடலாம்.

  • Permafrost எனும் நிரந்தரப் பனித்தகடுகள் உருகும்போது கரியமில வாயு வெளியேற்றப்படக்கூடும்.
படம்: AFP/Thibault JOURDAN

படம்: AFP/Thibault JOURDAN

ஈராண்டுக்கு உருகாமல் பனித்தகடாவே இருப்பதை, 'நிரந்தரப் பனித்தகடுகள்' என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கனடா, சைபீரியா, அலாஸ்கா போன்ற இடங்களில் இருக்கக்கூடிய நிரந்தரப் பனித்தகடுகளில் பல்லாண்டு காலமாக அழுகிப்போன விலங்குகளும் செடிகளும் இருக்கின்றன.

அதில் அதிகமான கரியமியவாயு உள்ளடங்கி இருப்பதால் நிரந்தரப் பனித்தகடுகள் உருகும்போது சுமார் 1,400 கிகாடன் (gigaton) கரியமிலவாயு வெளியேற்றப்படக்கூடும்.

அந்த அளவில் வெளியேற்றப்படும் கரியமிலவாயு அதிக நச்சுத்தன்மை கொண்டது - அதோடு, வனவிலங்குகள் வாழும் இடங்களும் சேதமடையலாம்.

  • வெப்பமண்டல உலகம்
(படம்: AFP/Louisa Gouliamaki)

படம்: AFP/Louisa Gouliamaki

சூரியக் கதிர்களை உள்வாங்கும் பனித்தகடுகள் இல்லையென்றால், உலகம் மேலும் சூடாகிவிடும்.

இதனால் குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய குளிர்ச்சியும் கடுமையாகிவிடலாம்.

  • மாறும் பருவநிலை; உணவு பற்றாக்குறை
MARCO LONGARI/AFP

படம்: MARCO LONGARI/AFP

உருகும் பனித்தகடுகளால் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படக்கூடும். அதேவேளையில் பருவநிலையில் நிலையற்ற தன்மை ஏற்படும். அதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படலாம். உலகில் பெரும்பாலான இடங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

பனித்தகடுகள் உருகுவதை மெதுவடையச் செய்வது எப்படி?

கரியமிலவாயு சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை அதிகமாக உள்வாங்கி பூமியில் தங்கச்செய்யும். அந்த வெப்பத்தினால்தான் பனித்தகடுகள் உருகுகின்றன.

சரி... சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்?

படம்: recyclensave.sg

படம்: recyclensave.sg

அதிகமான கரியமிலவாயுவை வெளியேற்றக்கூடிய நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளலாம். எப்படி...

  • மறுபயனீடு செய்யக்கூடியவற்றை வீணாக்காமல் இருக்கலாம்
  • இறைச்சி உணவுவகைகளை உண்பதைக் குறைத்துக்கொள்ளலாம்
  • மின்சாரச் சாதனங்களைத் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம்
  • சொந்தக் காரில் செல்வதைத் தவிர்த்து, பொதுப்போக்குவரத்தை நாடலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்