Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

திறன்பேசியில் நீங்கள் எதைப் பதிவுசெய்யக் கூடாது...

திறன்பேசிகளில் கட்டணம் செலுத்தலாம்; பொருள்கள் வாங்கலாம்; முக்கிய நாட்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளலாம்... அவற்றையெல்லாம் திறன்பேசியில் பதிவுசெய்தால் போதும்...

வாசிப்புநேரம் -

திறன்பேசிகளைத் தினந்தோறும் நாம் பயன்படுத்துகிறோம்.

திறன்பேசிகளில் கட்டணம் செலுத்தலாம்; பொருள்கள் வாங்கலாம்; முக்கிய நாட்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளலாம்... அவற்றையெல்லாம் திறன்பேசியில் பதிவுசெய்தால் போதும்...

கேட்பதற்கு மிக வசதியாகத் தெரிகிறது இல்லையா? அது தவறான சிந்தனை - வசதியை அளிக்கும் திறன்பேசி, ஆபத்தையும் அளிக்கும்.


எவற்றைத் திறன்பேசியில் பதிவுசெய்யக்கூடாது? ஏன்?

  • கடவுச்சொல் (Password)

நம்மில் பலரும் இணையத்தளங்களின் கடவுச்சொல்லைத் திறன்பேசியில் சேமிப்பதுண்டு. இணையத்தளங்களில் ஒரு பொத்தானை 'கிளிக்' செய்தால் போதும். கடவுச்சொல் தோன்றும்; அதைக்கொண்டு நுழையலாம்.

மேகக்கணிமை அமைப்பில் கடவுச்சொல் சேமிக்கப்பட்டால் அது மற்ற சாதனங்களையும் சென்றடையலாம். கடவுச்சொல் வெளியாகலாம்.

  • விரல் ரேகை

விரல் ரேகை கொண்டு உங்கள் திறன்பேசியைத் திறக்க அனுமதித்தால் மற்றவர்களோ திருடர்களோ உங்களைக் கட்டாயப்படுத்தி உங்கள் விரல்கொண்டு உங்கள் திறன்பேசியைத் திறந்துவிடலாம்.

  • தனிப்பட்ட படங்கள் / காணொளிகள்

யாரும் பார்க்கக்கூடாத உங்கள் தனிப்பட்ட படங்கள், காணொளிகள் போன்றவற்றை உங்கள் திறன்பேசியில் சேமித்துவைத்தால் அது மேகக்கணிமை அமைப்பில் பதிவாகிவிடும். அந்த அமைப்புடன் இணைந்திருக்கும் பிறர் அவற்றைக் காணலாம்.

  • கடன் அட்டை / கடப்பிதழ் (passport) / அடையாள அட்டை போன்றவற்றின் படங்கள்

மேகக்கணிமை அமைப்பைச் சென்றுசேரும் எந்தப் படமும் பாதுகாப்பாக இருக்காது. தனிப்பட்ட தரவுகளைக் கொண்ட படங்களை அவ்வாறு திறன்பேசியில் சேமிக்கவேண்டாம். அடையாளத் திருட்டு, பணத்திருட்டு போன்றவற்றுக்கு நீங்கள் ஆளாகும் வாய்ப்பைத் தவிர்க்கவேண்டும்.

  • வேலையிடத் திறன்பேசியில் தனிப்பட்டவற்றைப் பதிவுசெய்யக்கூடாது

நீங்கள் பயன்படுத்தும் திறன்பேசி உங்கள் வேலையிடத் திறன்பேசியாக இருந்தால், அதனைக் கவனத்துடன் பயன்படுத்தவேண்டும்.

அதற்குள் எந்த நேரத்திலும் நுழைந்து அதில் இருப்பவற்றைப் பார்க்கும் அனுமதியை உங்கள் முதலாளி பெற்றிருக்கலாம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்