Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இளம் பிள்ளைகளுக்கான பானத்தில் இனிப்பு சேர்க்கலாமா?

குழந்தை பருமன் தொடர்பிலான அக்கறைகள் அதிகம் நிலவும் வேளையில் இனிப்பு பானங்கள் குறித்த எச்சரிக்கைகள் வெளிவந்துள்ளன.

வாசிப்புநேரம் -
இளம் பிள்ளைகளுக்கான பானத்தில் இனிப்பு சேர்க்கலாமா?

(படம்:Pixabay)

பிள்ளைகள் முதல் சில ஆண்டுகளில் எத்தகைய பானங்களை அருந்தலாம் என்ற புதிய ஊட்டச்சத்து வழிகாட்டிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

தாய்ப்பால் அல்லது பால் மாவு மட்டுமே கைகுழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்த குழு சொன்னது.
6 மாதம் முதல் தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

பால் மாவு பயன்படுத்தும் தாய்மார் பிள்ளைகள் 12 மாதத்தை எட்டும்போது பசுமாட்டுப் பாலைக் குழந்தைகளுக்கு கொடுக்கத் தொடங்கலாம்.

பிள்ளைகளின் முதல் ஐந்து ஆண்டுகளில் அவர்கள் அதிகம் பாலையும் தண்ணீரையும் அருந்த வேண்டும் என்று அந்த வழிகாட்டி முறைகளில் குறிப்பிட்டிருந்தது.

(படம்: Pixabay)

ஐந்து வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்குச் சர்க்கரை கொண்ட நீரையோ இனிப்பு வகைகளையோ கொடுக்கக் கூடாது என்றும் வல்லுநர்கள் கூறினர்.

(படம்: Unsplash/rawpixel)

இளம் பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஒரு குவளைக்கும் குறைவான பழச்சாற்றையே அருந்த வேண்டும் என்று கூறப்பட்டது.

குழந்தை பருமன் தொடர்பிலான அக்கறைகள் அதிகம் நிலவும் வேளையில் இனிப்பு பானங்கள் குறித்த எச்சரிக்கைகள் வெளிவந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்