Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

WhatsApp செயலியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல் உண்மைதானா? சரிபார்க்கப் புதிய அம்சம்

உங்களுக்கு WhatsApp செயலியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல் உண்மையானதா? அது பற்றி இணையத்தில் என்ன கூறப்படுகிறது என்பதை எளிதில் அறிந்துகொள்ள, புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது WhatsApp .

வாசிப்புநேரம் -
WhatsApp செயலியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல் உண்மைதானா? சரிபார்க்கப் புதிய அம்சம்

படம்: REUTERS/Dado Ruvic

உங்களுக்கு WhatsApp செயலியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல் உண்மையானதா?

அது பற்றி இணையத்தில் என்ன கூறப்படுகிறது என்பதை எளிதில் அறிந்துகொள்ள, புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது WhatsApp .

இம்மாதம் மூன்றாம் தேதியிலிருந்து (ஆகஸ்ட் 3) 'Search the Web' என்ற அந்த அம்சம், முன்னோட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அது எவ்வாறு வேலைசெய்யும்?

- உரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவலுக்கு அருகே ஒரு பூதக்கண்ணாடி தென்படும்.
- பயனீட்டாளர்கள் அதை அழுத்தினால்,பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல், இணையத்தளத்தில் உடனடியாகத் தேடப்படும்.WhatsApp-க்கு அந்தத் தகவல் அனுப்பப்படாது.

- இணையத்தில், அந்தத் தகவலைப் பற்றிய செய்திகளையும் மற்ற இணையப்பதிவுகளையும் பயனீட்டாளர்கள் பார்க்கலாம்.

புதிய அம்சத்தின்வழி, பலமுறை பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல் குறித்துப் பயனீட்டாளர்கள் நல்ல முடிவை எடுக்கலாம்.

தங்களுக்கு அனுப்பப்பட்ட தகவலை மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லை.

பிரேசில், இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் 'Search the Web' முன்னோட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அது WhatsApp சேவையின் ஆக அண்மை பதிப்பில் இடம்பெறும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்