Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

WhatsApp-ஐ இனி பழைய ரகக் கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தமுடியாது

WhatsApp-ஐ இனி பழைய ரகக் கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தமுடியாது

வாசிப்புநேரம் -
WhatsApp-ஐ இனி பழைய ரகக் கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தமுடியாது

(படம்: Reuters)

பழைய ரகக் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும் மில்லியன்கணக்கானோரால் இனி WhatsApp செயலியைப் பயன்படுத்த முடியாது.

அடுத்த ஆண்டு முதல் தேதியிலிருந்து அது நடப்புக்குவரும் என்று நிறுவனம் சொன்னது.

Windows இயங்குதளத்தைப் பயன்படுத்தும் கைத்தொலைபேசிகள், பழைய iOS, Android கைத்தொலைபேசிகள் ஆகியவற்றில் தனது செயலியைப் பயன்படுத்த இயலாது என்று WhatsApp அண்மையில் அறிவித்தது.

அது நடப்புக்குவரும்போது கீழ்க்கண்ட கைத்தொலைபேசிகளை வைத்திருப்போரால் செயலியைப் பயன்படுத்த முடியாது:

  • iPhone 5க்கு முந்தைய iPhone கைத்தொலைபேசிகள்
  • 2010 அல்லது அதற்கு முன்னர் அறிமுகமான Android கைத்தொலைபேசிகள்
  • Microsoft நிறுவனத்தின் Lumia கருவிகள்
  • HP நிறுவனத்தின் Elite ரகக் கைத்தொலைபேசிகள்

செயலி மேம்படுத்தப்பட்டுவிட்டதால், மேற்கூறப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளின் இயங்கும் தளங்களில் அவை செயல்படச் சிரமப்படும். அதனால் சில அம்சங்கள் எப்போது வேண்டுமோ செயல்படாமல் நின்றுவிடும்.

என்று நிறுவனம் சொன்னது.

iOS, Android பயனீட்டாளர்களைப் பொறுத்தவரை, குறைந்தது iOS 9 அல்லது Android 3.0-வைக் கொண்டு இயங்கும் கைத்தொலைபேசிகளுக்கு அவர்கள் மாறவேண்டும் என்றும் WhatsApp தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்