Images
  • ageing
    (படம்: Pixabay)

இளமையில் நரை...எதனால்?

இளம் வயதிலேயே சிலருக்கு நரைமுடி ஏற்படுகிறது. முதுமையில் வரவேண்டிய நரை முன்கூட்டியே வருவதற்கான காரணங்கள்...

1) மரபணுக்கள்


பெற்றோர், தாத்தா பாட்டிக்கு இளமையிலேயே நரை வந்திருந்தால் பெரும்பாலும் உங்களுக்கும் அதேபோல் இளமையில் நரைமுடி வரும் சாத்தியம் அதிகம்.

2) மன அழுத்தம்


மன அழுத்தத்தினால் ஏற்படும் பின்விளைவுகளில் நரை முடியும் ஒன்று.

தூக்கமின்மை, பதற்றம், ஆரோக்கியமற்ற உணவு, ரத்த அழுத்தம் போன்றவை நரைமுடி ஏற்படக் காரணங்களாக இருக்கலாம்.

3) நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாடு

உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் அணுக்களைத் தாக்குவதால் தலைமுடி நரைக்கலாம். இதனால் சில சமயங்களில் Vitiligo எனும் தோல் நிறக் குறைபாடு எற்படலாம் அல்லது தலைமுடி உதிரக்கூடும்.

4) தைராயிடு சுரப்பியில் குறைபாடு

தைராயிடு (Thyroid) சுரப்பி அதிகமாகச் சுரந்தோ அல்லது போதுமான அளவு சுரக்கப்படவில்லை என்றாலோ அது தலைமுடியின் நிறத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். உடலில் போதுமான அளவு மெலனின் இல்லாவிடில் தலைமுடி நரைக்கலாம்.

5) வைட்டமின் B-12 குறைபாடு

வைட்டமின் B-12 குறைபாடு ஏற்படுவதால் தலைமுடி வளர்ச்சியும் நிறமும் பாதிக்கப்படுகின்றன. தலைமுடி எளிதில் உடையக்கூடிய தன்மையுடையதாக மாறுகிறது.

6) புகைபிடித்தல்


புகைபிடிப்பதால் ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன. அதனால் உடலின் பல பாகங்களுக்குப் போதுமான ரத்தம் சென்றடைவதில்லை. தலைமுடியில் கருமை உற்பத்தியாவதில்லை. சிகரெட்டுகளில் உள்ள நச்சுப்பொருள்களும் தலைமுடியைப் பாதிக்கின்றன.

Top