Images
  • period
    (படம்:Pixabay)

மாதவிடாய் - உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்படிச் சமாளிப்பது?

'மாதவிடாய்' என்ற வார்த்தையைக் கேட்டதும் பெரும்பாலான பெண்களுக்கு மாதந்தோறும் வரும் அந்த 3இலிருந்து 5 நாள்
அனுபவம்தான் ஞாபகம் வரும்.

ஆனால் மாதவிடாய்க் காலம் அதோடு முடிந்துவிடுவதில்லை.

இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு முன்னும் பின்னும் உடலில் எத்தனையோ மாற்றங்கள் உண்டாகின்றன.

அவற்றைத் தெரிந்துகொண்டால் வலியையும் மன உளைச்சலையும் குறைத்துக்கொள்வதற்கு வழி காணலாம்.

'Menstrual cycle' என்று சொல்லப்படும் மாதவிடாய்ச் சுழல் பொதுவில் 28 நாட்கள் நீடிக்கும்.

இந்த 28 நாட்களில் பெண்களின் உடலில் ஹார்மோன் எனப்படும் சுரப்பி நீர் சுரக்கிறது.

சுரக்கும் நீரின் அளவைப் பொறுத்து உடல், மனநலம் அமையும்.
 மாதவிடாய் - உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்படிச் சமாளிப்பது?

Top