Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பலரின் விருப்பத்தைப் பெற்ற Instagram முட்டை

Instagram-இல் பழுப்பு நிறமுள்ள முட்டையின் படம் ஒன்று ஆக அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ளது. 

வாசிப்புநேரம் -

Instagram-இல் பழுப்பு நிறமுள்ள முட்டையின் படம் ஒன்று ஆக அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ளது.

'world_record_egg' என்னும் Instagram கணக்கிலிருந்து அந்தப் படம் பதிவேற்றப்பட்டது.

மனநல சுகாதாரம் மீதான விழிப்புணர்வை அந்தப் படம் ஊக்குவிப்பதாகக் கருதப்படுகிறது.

இதுவரை 52 மில்லியனுக்கு அதிகமான விருப்பங்களை அது பெற்றுள்ளது.

"ஆக அதிகமானோரின் விருப்பத்தைப் பெற்று ஒன்றிணைந்து உலகச் சாதனை படைப்போம்" என்னும் குறிப்புடன் படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதற்கு முன்னர் அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலம் கைலி ஜென்னரின் (Kylie Jenner) Instagram பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படம் ஒன்று அந்தச் சாதனையைப் (18 மில்லியன்) பெற்றிருந்தது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்