Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகின் ஆக உயரமான Bungee சாகசம்... குதிக்கத் தயாரா?

உலகின் ஆக உயரமான பஞ்சீ (Bungee) சாகசத் தலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

உலகின் ஆக உயரமான பஞ்சீ (Bungee) சாகசத் தலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.

ஹூனான் (Hunan) மாநிலத்தின் Zhangjiajie Grand Canyon கண்ணாடிப் பாலத்திற்குச் செல்வோர் அந்தச் சாகசத்தில் ஈடுபடலாம்.

பாலத்தைச் சுற்றியுள்ள வுலிங்யுவான் (Wulingyuan)காட்டுப்பகுதியைக் கண்டுகளிக்க ஒரு வித்தியாசமான வழி...

260 மீட்டர் உயரத்திலிருந்து தலைகீழாகக் குதிக்கலாம்...

சென்ற ஆண்டு இறுதியில் சாகசத் தலம் திறக்கப்பட்டது.கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால், அதன் செயல்பாடுகள் தாமதமடைந்தன.

எனினும், உள்ளூர்வாசிகளின் கூட்டம் சற்று அதிகரிக்க, வர்த்தகம் மெல்ல மெல்ல வளர்ச்சி காண்பதாக சாகசத் தல நிர்வாகி கூறினார்.

தற்போது, நாளொன்றுக்கு 20 பேர் சாகசத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இல்லாததால், கட்டணம் சுமார் 40 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்குக் கட்டணம் சுமார் 415 வெள்ளி.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்