Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'உலக வன உயிர்கள் தினம்' - உணர்த்துவது என்ன?

இன்று உலக வன உயிர்கள் தினம். வனவிலங்கு, செடிகொடிகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பது அதன் நோக்கம். 

வாசிப்புநேரம் -
'உலக வன உயிர்கள் தினம்' - உணர்த்துவது என்ன?

(படம்: Pixabay)

இன்று உலக வன உயிர்கள் தினம். வனவிலங்கு, செடிகொடிகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பது அதன் நோக்கம். 

'அனைத்து உயிரினங்களையும் பூமியில் நீடித்து நிலைக்க வைத்தல்' என்ற கருப்பொருளுடன்  இவ்வாண்டின் வன உயிர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 

உலகின் பல்லுயிர்ச்சூழலில் வனவிலங்குகளும் செடிகொடிகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.  வன உயிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பல நன்மைகளை எடுத்துக் கூறுகிறது இவ்வாண்டின் கொண்டாட்டங்கள். 

குறிப்பாக வன உயிர்களின் அருகில் வசிக்கும் சமூகங்கள் அடையும் நன்மைகள் அலசப்படும். 

மனித நடவடிக்கைகளின்மூலம் விலங்குகளும் செடிகளும் பாதிக்கப்படுகின்றன. தற்போது இருக்கும் உயிரினங்களில் சுமார் 25 விழுக்காடு வரும் ஆண்டுகளில் அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கவும் குறைக்கவும் அரசாங்கங்கள் எத்தகைய அவரச நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதையும் இவ்வாண்டுக் கொண்டாட்டங்கள் ஆராயும். 

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 68ஆவது பொதுக் கூட்டம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கூடியபோது, ' அனைத்துலக வன உயிர்கள் தினம்' மார்ச் 3ஆம் தேதி அனுசரிக்கப்படும் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. 

1973ஆம் ஆண்டு CITES (the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்னும் ஒப்பந்தம் கையெழுத்தான நாளை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 3ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. 

அனைத்துலக வர்த்தகத்தில் வனவிலங்கு, செடிகொடிகள் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை அந்த ஒப்பந்தம் உறுதிசெய்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்