Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகக்கவசம் அணிந்தவாறு உடற்பயிற்சி செய்வது கடினமா?

முகக்கவசம் அணிந்தவாறு உடற்பயிற்சி செய்யும்போது, அதிகமாக வியர்த்துக்கொட்டி, மூச்சு விடக் கடினமாகிவிடும் என்று சிலர் எண்ணலாம்.

வாசிப்புநேரம் -

முகக்கவசம் அணிந்தவாறு உடற்பயிற்சி செய்யும்போது, அதிகமாக வியர்த்துக்கொட்டி, மூச்சு விடக் கடினமாகிவிடும் என்று சிலர் எண்ணலாம்.

அதனால், பலர் உடற்பயிற்சியில் ஈடுபடத் தயங்குகின்றனர்.

ஆனால், முகக்கவசம் அணிவதால் உடற்பயிற்சிகள் கடினமாவதில்லை என இரு புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

இஸ்ரேலின் ரம்பம் (Rambam) சுகாதாரப் பராமரிப்பு முகாம் நடத்திய ஆய்வில், 16 ஆரோக்கியமான ஆண்கள் சோதிக்கப்பட்டனர்.

அவர்கள் சிகிச்சைக்கான முகக்கவசம் அல்லது N95 ரக முகக்கவசத்தை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும்போது ஒரு முறையும், முகக்கவசம் ஏதும் அணியாமல் ஒரு முறையும் சோதிக்கப்பட்டனர்.

உடற்பயிற்சி செய்யும்போது முகக்கவசங்கள் அணிவதால், அவர்கள் அதிக சோர்வடையவில்லை என்று ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக The New York Times செய்தி நிறுவனம் கூறியது.

சோதனையில் ஈடுபட்ட ஆண்களும், முகக்கவசத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது மூச்சுத் திணறல், தலைவலி எதையும் உணரவில்லை என்று தெரிவித்தனர்.

இரண்டாவது ஆய்வில் கலந்துகொண்டவர்களும் அதே கருத்தை முன்வைத்ததாக The New York Times தெரிவித்தது.

இருப்பினும், இரு ஆய்வுகளிலும், ஆரோக்கியமான பெரியவர்கள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இளம் வயதினர், மூத்தோர் இடையே முடிவுகள் மாறுபட்டிருக்க வாய்ப்புண்டு.

எனினும், மக்கள் தயக்கமின்றி முகக்கவசத்துடன் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யவேண்டும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்