Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகின் ஆக விலையுயர்ந்த காலணிகள்...விலை?

காலணிகள்...கால்களைப் பாதுகாப்பவை என்றபோதும், இவற்றுக்கு அதிகபட்சம் எவ்வளவு விலை கொடுக்கலாம்?

வாசிப்புநேரம் -
உலகின் ஆக விலையுயர்ந்த காலணிகள்...விலை?

படம்: Sotheby's

காலணிகள்...கால்களைப் பாதுகாப்பவை என்றபோதும், இவற்றுக்கு அதிகபட்சம் எவ்வளவு விலை கொடுக்கலாம்?

1 மில்லியன் டாலர் என்கிறது அத்தகைய காலணிகளை விற்பனைக்குவிடவிருக்கும் Sotheby நிறுவனம்.

Nike Air Yeezy 1 Prototypes என்ற அந்தக் காலணிகளை Nike நிறுவனத்துடன் அமெரிக்க ராப் பாடகர் கான்யே வெஸ்ட் (Kanye West) இணைந்து காலணிகளை உருவாக்கியதாக CNN செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

விற்பனைக்கு வரவிருக்கும் அந்தக் காலணிகள் வெஸ்டுக்குச் சொந்தமானவை.

அவற்றை 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற 50ஆவது Grammy விருதுகளில் வெஸ்ட் அணிந்திருந்தார்.

காலணிகள், உலகிலேயே ஆக விலையுயர்ந்தவை என்று நம்பப்படுகிறது.

இம்மாத இறுதியில், தனியார் ஏலத்தில் அந்தக் காலணிகள் விற்கப்படும். அதன் ஆரம்பக்கட்ட விலை இன்னமும் வெளியிடப்படவில்லை

இருப்பினும், அது 1 மில்லியன் டாலருக்கும் அதிகம் என நிறுவனம் குறிப்பிட்டது.

- CNN
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்