Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குழந்தைகள் இடம்பெறும் காணொளிகளில் கருத்துகளைப் பதிவுசெய்யமுடியாது: YouTube

YouTube, குழந்தைகள் இடம்பெறும் காணொளிகளை யாரும் எவ்விதக் கருத்துகளையும் பதிவு செய்யமுடியாத வகையில் மாற்றி அமைத்துள்ளது. 

வாசிப்புநேரம் -
குழந்தைகள் இடம்பெறும் காணொளிகளில் கருத்துகளைப் பதிவுசெய்யமுடியாது: YouTube

(படம்: Pixabay)

YouTube, குழந்தைகள் இடம்பெறும் காணொளிகளை யாரும் எவ்விதக் கருத்துகளையும் பதிவு செய்யமுடியாத வகையில் மாற்றி அமைத்துள்ளது.

கருத்துத் தெரிவிக்கும் பகுதியில் குழந்தைகளைப் பயன்படுத்தி, மோசமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது குறித்து சஞ்சிகை ஒன்று அண்மையில் YouTube நிறுவனத்தைச் சாடியிருந்தது.

அதைத் தொடர்ந்து YouTube அந்த மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

மில்லியன்கணக்கான காணொளிகளிலிருந்து பிள்ளைகளைப் பாதகமாகப் பயன்படுத்தும் கருத்துக்களை அகற்றியதாக YouTube நிறுவனம் வலைப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டது.

தங்கள் கொள்கைக்கு எதிரான அத்தகைய கருத்துக்களை நீக்கும் அதே நேரத்தில், அவற்றைச் சுலபமாகக் கண்டறியக்கூடிய தளம் ஒன்றையும் மேம்படுத்திக்-கொண்டிருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்