Zootopia திரைப்படத்தை மையமாகக் கொண்ட உல்லாசத் தலம் ! எங்கே ?
Disney நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த Zootopia கேலிச் சித்திர நகைச்சுவைத் திரைப்படத்தை மையமாகக் கொண்டு சீனாவில், உல்லாசத் தலம் ஒன்று அமைக்கப்படவிருக்கிறது.
Disney நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த Zootopia கேலிச் சித்திர நகைச்சுவைத் திரைப்படத்தை மையமாகக் கொண்டு சீனாவில், உல்லாசத் தலம் ஒன்று அமைக்கப்படவிருக்கிறது.
ஷாங்காய் நகரின் Disney உல்லாசத் தலத்தில் அதை அமைப்பதற்கான திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது.
Zootopia திரைப்படத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்படவிருக்கும் முதல் உல்லாசத் தலமாக அது இருக்கும்.
அதற்கான கட்டுமானம் இவ்வாண்டின் பிற்பாதியில் தொடங்கும் என Disney நிறுவனம் கூறியது.
Zootopia உல்லாசத் தலம் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி அது தகவல் ஏதும் வழங்கவில்லை
சீன வரலாற்றில், ஆக அதிக வசூலைக் குவித்த கேலிச் சித்திரத் திரைப்படம் Zootopia.
உல்லாசத் தலத்தை Disney, சீனாவில் அமைப்பதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று.