Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முகக் கவசங்களை எங்கு பெறலாம்? சளிக்காய்ச்சலுக்கு எங்கு செல்லலாம்?

சிங்கப்பூரில் இன்று முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களைக் குடியிருப்பு நிலையங்களிலும் சமூக மன்றங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

வாசிப்புநேரம் -


சிங்கப்பூரில் இன்று முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களைக் குடியிருப்பு நிலையங்களிலும் சமூக மன்றங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

முகக் கவசங்களைப் பெறுவது நேரம், புளோக், வட்டாரம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும்.

வீட்டின் அருகில் முகக் கவசங்கள் எங்கு விநியோகம் செய்யப்படுகின்றன என்பதை https://www.maskgowhere.gov.sg/ என்ற இணையப்பக்கம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.

வீட்டின் Postal Code எனப்படும் அஞ்சல் குறியீட்டு எண்ணை இணையப்பக்கத்தில் உள்ளிட்டால், வீட்டின் அருகே உள்ள முகக் கவசம் விநியோகம் செய்யப்படும் இடங்களின் பட்டியலும், ஒவ்வொரு இடமும் வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்த விவரமும் இடம் பெறும்.

முகக் கவசங்களைப் பெற்றுக்கொள்ள அடையாள அட்டை அல்லது, பிறப்புச் சான்றிதழை விநியோக இடங்களில் காட்ட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் சார்பிலும் அடையாள அட்டைகளைக் காண்பித்து முகக் கவசங்களைப் பெறலாம்.

உடல்நலமில்லாதவர்கள் வீட்டின் அருகில் உள்ள பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிய https://www.flugowhere.gov.sg/ என்ற பக்கத்தை நாடலாம். மருந்தகத்தின் பெயரின் அடிப்படையில் அது பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகமா என்று சரிபார்க்கலாம்.

மருந்தகங்களின் தொடர்பு எண்களும் இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்