Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

நிம்மதி நிறைந்த நிசப்தம்

பிறந்த நாளன்று ஒலித்த அழுகையிலிருந்து ஓயாது கேட்கும் அரட்டை வரை சத்தங்கள் நம்மைத் தொடர்ந்து வருகின்றன. ஓசை இரண்டு வகைப்படும். அதில் நாதம் என்பது, இனிமையான வகையைச் சேர்ந்தது. இரைச்சல் என்பது காதிற்கு ஒவ்வாத ஓசை.

வாசிப்புநேரம் -
நிம்மதி நிறைந்த நிசப்தம்

'அன்னப்பறவையுடன் தமயந்தி'. ராஜா ரவி வர்மா ஓவியம்.

பிறந்த நாளன்று ஒலித்த அழுகையிலிருந்து ஓயாது கேட்கும் அரட்டை வரை சத்தங்கள் நம்மைத் தொடர்ந்து வருகின்றன. ஓசை இரண்டு வகைப்படும். அதில் நாதம் என்பது, இனிமையான வகையைச் சேர்ந்தது. இரைச்சல் என்பது காதிற்கு ஒவ்வாத ஓசை.

இசையில் ஏழு ஸ்வரங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலங்கிலிருந்து தோன்றியவை. மயில் அகவும் ஓசையிலிருந்து 'ஸ' என்ற ஸ்வரம். குதிரை கனைக்கும் ஓசையிலிருந்து 'த' என்ற மற்றொரு ஸ்வரம். பல்வேறு விலங்குகளின் ஓசைகளை ஒருங்கிணைத்தே பாடல்கள் அமைகின்றன.

ஆறறிவு படைத்த நம்மால், முற்றிலும் புதிய ஓசையொன்றை உருவாக்குவது என்பது கடினம். ஆனால் வருத்தம் என்னவென்றால், நாம் கேட்கும் இனிமையான ஓசைகளை அப்படியே திரும்ப ஒலிப்பதுகூடப் பெரும்பாலும் சிரமமான ஒன்றுதான்.

ஆணவத்தின் அத்துமீறலாக வெளியாவது எல்லாமே தேவையற்ற பேச்சுக்களே. அத்தகைய பேச்சுக்களை இரைச்சல் என்றே வகைப்படுத்தலாம். 

பயனில சொல்லாமைக்காக ஓர் அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளார் வான்புகழ் வள்ளுவர். வானளந்த வாமனர் போல், ஈரடியால் உலகை அளந்தவர் அவர். ஆனால், பேசியதையே பேசி, கேட்பவரை ஈர்ப்பதாக எண்ணி மற்றவர்களின் வெறுப்புக்குப் பாத்திரமாக அமைகிறார்கள் சிலர்.

நிசப்தம் என்ற மண்டலத்தில்தான் எண்ண அலைகளின் மின் ஆற்றலை உணர முடிகிறது. சிந்தனைகள் மெரூகூட்டப்படுவது, விழிப்புமிக்க நிசப்தத்தில். வெளியில் இருக்கும் பிரபஞ்சத்தையும் மனத்திற்குள் புதைந்திருக்கும் அண்டங்களையும் கவனிக்க உதவும் சாதனம், நிதானம் நிறைந்த நிசப்தம். ஆங்காரத்தை உள்ளடக்கி ஐம்புலன்களைச் சுட்டறுக்க முதற்படி நிசப்தம்.

இனியவை பேசலாம். சற்றுக் கடிந்துசொன்னாலும் அறம் மீறக்கூடாது என்பது என் கருத்து. ஆனால் பயனில்லாமல் பேசக்கூடாது. அது ஆக்கத்தையே அழித்துவிடும். 

நிசப்தத்திற்கான ரசனை எல்லோருக்கும் இயல்பாக வந்துவிடாது. அதற்குப் பயிற்சியும் முயற்சியும் தேவை. அமைதியை ரசிக்கத் தெரிந்தவர் பாக்கியசாலி...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்