Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

'திடீர் நட்சத்திரங்கள்'

ஆங்கிலத்தில் rags-to-riches என ஒன்று சொல்லப்படுவதுண்டு. மிகவும் சராசரியாக வாழ்ந்துகொண்டிருந்து திடீரென எதிர்பாராத விதமாகப் பெயர், புகழ், செல்வாக்கு என அனைத்தையும் சட்டென்று சம்பாதிக்கும் ஒருவரின் வாழ்க்கைக் கதையைக் குறிப்பது அது.

வாசிப்புநேரம் -

ஆங்கிலத்தில் rags-to-riches என ஒன்று சொல்லப்படுவதுண்டு. மிகவும் சராசரியாக வாழ்ந்துகொண்டிருந்து திடீரென எதிர்பாராத விதமாகப் பெயர், புகழ், செல்வாக்கு என அனைத்தையும் சட்டென்று சம்பாதிக்கும் ஒருவரின் வாழ்க்கைக் கதையைக் குறிப்பது அது.
 பிரபல ஹேரி பாட்டர் நாவல்களை எழுதிய J. K. ரௌலிங், லெஸ்ட்டர் சிட்டி காற்பந்து வீரர் ஜேமி வார்டி, மென்செஸ்ட்டர் யுனைட்டடின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்டு, பிரிட்டிஷ் பாடகி சூசன் போய்ல் உள்ளிட்டோரின் வாழ்க்கைப் பயணங்கள் இதற்கு உதாரணங்கள்.

இது அடிக்கடி நடக்கும் ஒன்றல்ல. உலகில் எல்லாக் காலத்திலும் அவ்வப்போது நடக்கும் ஒன்று. இப்படி ஒரு கதை உருவெடுக்கும்போது உலகமே உற்சாகத்தில் இருக்கும். ஊடகங்கள் போட்டியிட்டுக்கொண்டு சம்பந்தப்பட்ட ஆளை பேட்டி காண முனையும்.

நவீன காலத்தில் இது சாத்தியமன்று. காரணம், காலம் மாறிவிட்டது. அனைத்துத் துறைகளிலும் வலுவான கட்டமைப்பு உள்ளது. அவற்றிலுள்ள செயல்முறைகளையும் வழிமுறைகளையும் மீறி உச்சத்தைத் தொடுவது சிரமம் என்று சிலர் கூறுவதுண்டு.

ஒரு வகையில் இது நியாயமான ஒரு கருத்துதான். ஒரு காலத்தில் இத்தகைய திடீர் நட்சத்திரங்கள் கூடுதல் எண்ணிக்கையில் உருவெடுத்தனர். போட்டித்தன்மை மிகுந்த நவீன காலத்தில் உச்சத்தைத் தொடுவது என்பது சாதாரணமன்று. ஆனால் திடீர் நட்சத்திரங்களாக உருவெடுப்போர் அவ்வாறு ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதில்லை. தங்கள் திறமை மீது அபாரமான நம்பிக்கையும் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்ற மனப்போக்கும் அவர்களிடத்தில் இருக்கும்.

சிலர் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை  எடுப்பர். விட்டுக்கொடுக்காமல் உழைப்பர். நல்லது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். வேறு சிலர் அந்த நம்பிக்கையைக் காலப்போக்கில் இழந்துவிடுவர். எதுவும் நடக்கப்போவதில்லை என்ற மனநிலை வந்துவிடும்.
விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் எதுவும் சாத்தியம், என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என எத்தனையோ புத்தகங்கள் சொல்கின்றன.

சரி... அந்த வாதத்திற்குச் செல்லவேண்டாம். ஆனால் திடீர் நட்சத்திரங்களாக உருவெடுப்பவர்களிடையே உன்னத நிலையை அடையவேண்டும் என்ற மனவுறுதி இருக்கும். ஆனால் அந்தப் பலனை எதிர்பார்த்து அவர்கள் உழைக்கமாட்டார்கள். முடிந்தவரை முயற்சி செய்வோம், என்ன நடக்கிறது எனப் பார்ப்போம் என்றுதான் அவர்களின் மனநிலை இருக்கும். போட்டி, வீண் பேச்சு, வாக்குவாதங்கள் இதுபோன்றவற்றில் அவர்களின் கவனம் செல்லாது. நிலையான சிந்தனை, தன்னம்பிக்கை, மனத்திடம், விடாமுயற்சி, அயராத உழைப்பு. இவையே இத்தகையோரைச் சித்திரிக்கும் குணாதிசியங்கள்.

இந்த அம்சங்கள் முழுமையாக இருக்கும் ஒருசிலர் சமுதாயத்தில் இருக்கின்றனர். என்றென்றும் இருப்பர். எனவே rags-to-riches திடீர் நட்சத்திரக் கதைகள் நிற்கப்போவதில்லை. அவை தொடர்ந்துகொண்டே இருக்கும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்