Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

எண்ணங்களைச் சலவை செய்வோம்

நம்மில் பலர் இளம் வயதில் புத்தாண்டுக்குப் பல எதிர்பார்ப்புகளுடன் நள்ளிரவு வரை காத்திருப்போம் . 

வாசிப்புநேரம் -

நம்மில் பலர் இளம் வயதில் புத்தாண்டுக்குப் பல எதிர்பார்ப்புகளுடன் நள்ளிரவு வரை காத்திருப்போம் .

பெரியவர்களான பிறகு, நள்ளிரவு வரை தாக்குப்பிடிப்பது சிலருக்குக் கடினமாக இருக்கலாம்.

இது இன்னொரு நாள்தானே எனத்தோன்றும் சிலருக்கு.

புத்தாண்டு பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியையே கொண்டுவருகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சிக்கும் எண்ணமே முக்கியம்.

சிறு வயதில் பல கனவுகளுடன் கற்பனைக் கோட்டையில் கொடிகட்டி வாழ்ந்திருக்கலாம்.

சில நேரங்களில் அவை நிறைவேறலாம். பல நேரங்களில் அவை மலையேறும் நாளும் சீக்கிரமே வந்திருக்கலாம்.

எத்தனையோ கனவுகளைக் காலப்போக்கில் நாம் பின்னுக்குத் தள்ளியிருப்போம்.

ஆண்டுகள் கடக்க கனவுகள் மாறலாம்..இலக்குகளை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் சென்றிருக்கலாம்.

இலக்குகள் என்னவாக இருந்தாலும் மன உறுதி முக்கியம்.

முதலில் நினைத்ததுபோன்றே அனைத்தையும் செய்துமுடிப்பதற்கான சாத்தியம் குறைவுதான்.

எனினும், இறுதியில் செய்வதைச் செவ்வனே செய்ய வேண்டும்.

மனதிருப்தியும் ஆர்வமும் முழு முயற்சியும் அவசியம்.

தெரிந்துகொள்ளும் ஆர்வம் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

திட்டமிடுதல் நல்லது. ஆனால் நேரத்துக்குத் தகுந்தவாறு அதில் மாற்றங்களைச் செய்யத் தயங்கக்கூடாது.

எப்போது நாம் பெரியவராவோம் என்ற நினைப்பு சிறுவர்களுக்கு. பெரியவர்களோ, துள்ளித் திருந்த காலத்தை எண்ணி ஏங்குகின்றனர்..

ஏன் இந்த நிலைமை? வருடங்கள் கடந்துசெல்ல, எண்ணங்கள் மாசுபடுவது ஏன்?

இலவச ஆலோசனை பலருக்குப் பிடிக்காது. ஆனால் நாம் சொல்வதை நாமே கேட்கவில்லை என்றால் என்ன நியாயம்?

நினைவுகளுக்கும் ஓய்வு தேவை.

சூழலை மாற்றிக்கொள்ளலாம். மனத்துக்கும் உடலுக்கும் ஓய்வு தேவை எனத்தோன்றும்போது, விடுமுறைக்குச் செல்வது நல்லது.

பிற நாடுகளின் வரலாறு, கலாசாரம், கலை போன்றவற்றைத் தெரிந்துகொள்வதன்வழி புத்துணர்வு கிட்டும்.

வெளிநாட்டுக்குச் செல்ல இயலாது என்ற பட்சத்தில் உள்ளூரிலேயே பல அழகிய இடங்கள் உள்ளன.

புதிய இடங்களைக் கண்டுபிடித்து அன்புக்குரியவர்களுடன் சென்று நேரத்தைக் கழிக்கலாம்.

சில நேரங்களில் நமக்கென நேரம் ஒதுக்கிக்கொள்வதும் அத்தியாவசியமானது.

புத்தகங்களைப் புரட்டுவதுபோல நாம் கடந்துவந்த பாதையைப் புரட்டுவதும்அவ்வப்போது நன்மை பயக்கும்.

நல்லது நிலைப்பதற்கு நல்லவற்றை நினைக்க வேண்டும். தீமை எண்ணங்கள் தோன்றுவது இயல்பே.

ஆனால்அவற்றைப் பின்னுக்குத் தள்ளி, நற்சிந்தனைகளை விதைக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

மனத்தில் அடிக்கடி உதிக்கும் நினைவுகள் நிஜமாவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதெனக் கருதப்படுகிறது.

ஆதலால் இந்தப் புத்தாண்டில், உள்ளத்துக்கும் உறவுகளுக்கும் உகந்த விவகாரங்களில் ஈடுபடஉறுதிஎடுத்துக்கொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்