Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

இணையத்தில் தடம் அழிப்பு

இணையம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. இணையத்தில் உரையாடவும், உறவாடவும் நேரம் போதவில்லை. இணையம் இல்லாவிட்டால் நமக்கு நேரம் போகவேயில்லை.

வாசிப்புநேரம் -

இணையம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. இணையத்தில் உரையாடவும், உறவாடவும் நேரம் போதவில்லை. இணையம் இல்லாவிட்டால் நமக்கு நேரம் போகவேயில்லை.

இணையம் - வருங்காலத்தில் நம் வாழ்வோடு இன்னும் இன்னும், முன்னும் பின்னும் பின்னிப் பிணைந்திருக்கும். இணையம் - மாபெரும் சமுத்திரம். கரையில் நின்று கால் நனைத்துத் திரும்பலாம் என்று நினைப்பவர்களைக் கூட வாரிச் சுருட்டி உள்ளே இழுத்துக் கொள்ளும்;கொல்லும்.(!)

மின்னஞ்சல் பயன்பாடு இன்று பரவலாகி விட்டது. வளர்ந்த நாடுகளில் அது இன்றி எந்தத் தொடர்பும் சாத்தியமில்லை என்ற நிலை வந்துவிட்டது. வளரும் நாடுகளில் விரைவில் வரக்கூடும். அந்த நிலையிலிருந்து விலகிச்செல்வது சாத்தியமில்லை.

இணைய வர்த்தகம் புதிய உச்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இணையம் வழியே எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்றாலும் மின்னஞ்சல் அவசியமாகிறது. அவ்வப்போது இணையத்தில் கொடுக்கப்படும் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள், மின்னஞ்சல்களை இருந்த "தடம்" தெரியாமல் நிரந்தரமாக அழிப்பது சாத்தியமா?
சாத்தியம் !!! என்பது கூடுதல் மகிழ்ச்சி.

சுவீடனைச் சேர்ந்தவர்கள் Wille Dahlbo, Linus Unneback. இருவரும் கணினிப் புலமையாளர்கள்.

இணையத்தில் உங்கள் "தட(ய)ம்" அழிக்க இவர்கள் உதவுகிறார்கள்.
deseat.me தளத்துக்குச் செல்லுங்கள். உங்கள் மின்னஞ்சல், கடவுச் சொல் ஆகியவற்றைச் சொல்லுங்கள்.
எங்கெல்லாம் உங்களுக்கு இணையக் கணக்கு இருக்கிறது என்று வலை போட்டுத் தேடிச் சொல்லும். தேவையானவற்றை வைத்துக்கொள்ளுங்கள். அவசியமில்லை என்பனவற்றை வெட்டித் தள்ளுங்கள்.
நிமிடத்தில் நிம்மதி உங்கள் பக்கம்!

கூகுள் பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே deseat.me செயல்படுகிறது. எந்த வகையிலும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தப்படமாட்டா என்று உரக்கச் சொல்லி உறுதி தருகிறார்கள் தளத்தை வடிவமைத்தவர்கள்.
தற்போது deseat.me தளத்தில் சில கட்டுப்பாடுகள் உண்டு. கூகுள் மின்னஞ்சல் கொடுத்தால், அதைக் கொண்டு நீங்கள் எங்கெல்லாம் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று அடையாளம் சொல்லும்.

Hotmail போன்ற வேறு தளங்களில் பயனர் கணக்கு வைத்திருப்போர் அவற்றிலிருந்து முற்றிலும் விலக நினைத்தால் அத்தகைய தளங்களை அணுகி உரிய அனுமதி பெற்று அழித்துத் தருகிறார்கள்.
இன்னும் என்ன தாமதம்... deseat.meக்கு விரைந்து செல்லுங்கள். தேவையற்ற இணையக் கணக்குகளைக் கொல்லுங்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்