Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

சமூக"வலை"த்தளங்கள் - அசந்தால் ஆட்டம் காலி

ஒருவர் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறாரோ இல்லையோ. சமூகவலைத் தளங்களில் அவருக்கு ஒரு கணக்கு இருக்க வேண்டியது அவசியம். தவறினால் இன்றைய இளைய சமூகம் அவரைப் பழைமைவாதியாக வினோதமாகப் பார்க்கும்.

வாசிப்புநேரம் -
சமூக"வலை"த்தளங்கள் - அசந்தால் ஆட்டம் காலி

AFP-FACEBOOK

ஒருவர் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறாரோ இல்லையோ. சமூகவலைத் தளங்களில் அவருக்கு ஒரு கணக்கு இருக்க வேண்டியது அவசியம். தவறினால் இன்றைய இளைய சமூகம் அவரைப் பழைமைவாதியாக வினோதமாகப் பார்க்கும்.

உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கின்றன சமூக வலைத்தளங்கள். அவற்றின் வழியே செல்லும் எல்லாப் பயணங்களும், எல்லாருக்கும் சுகமாக அமைவதில்லை.

ஊதா வண்ணத்திலேயே Facebook முகப்புப் பக்கத்தைப் பார்த்துப் பார்த்து உற்சாகம் குன்றி விட்டது. வேறு வண்ணத்தில் மாற்றினால் நல்லது என்ற யோசனையா? உங்களோடு ஒரு நிமிடம் பேச வேண்டும்.

வண்ண வண்ணமாய் முகப்புப் பக்கம் அமைப்பது நல்லது. அதற்குத் துணை செய்கிறது Facebook Color Changer app செயலி. பிடித்த வண்ணத்தில் முகப்புப் பக்கத்தை மாற்றி, பார்ப்பவர்களைச் சுண்டியிழுக்கலாம். 

ஆனால் இந்தச் செயலி உங்களைத் துன்பத்திலும் தள்ளக்கூடும். எப்படி வண்ணம் பூசலாம் என்று விரிவாக விளக்குகிறது ஒரு காணொளி. அதை நட்பு வட்டத்தில் உள்ளவர்களுடன் பகிரும்போது ஆபத்தும் ஒட்டியிருக்க வாய்ப்பு உண்டு.

“வாங்க பழகலாம்?” என்று விரும்பி அழைக்கும் பல விளம்பரங்கள், பிரச்சினைகளின் மறைமுகப் பிறப்பிடம். பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதே என்று நினைத்து அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தால் நண்பர்களின் சுயவிவரக் குறிப்புகள் அனைத்தும் களவாடப்படக்கூடம். கைத்தொலைபேசி வழியே Facebook இல் உலவும் பழக்கமுடையவரா? உங்களுக்கு ஆபத்து அதிகம். அழையா விருந்தாளிகளாக வரும் நச்சு நிரல்கள் உங்கள் கைபேசிக்கே வேட்டு வைக்கலாம். கவனம் அவசியம்.

Be Careful என்னைச் சொன்னேன்... :)

கொஞ்சம் அசந்தால் போதும், ஆளையே காலி பண்ணக் காத்திருக்கிறார்கள் இணையக் குற்றவாளிகள். உங்கள் பலவீனம் அவர்களின் பலம். "சொக்க வைக்கும்" சொற்கள் உங்களை இணையக் குற்றங்களில் "சிக்க வைக்கும்". Not Safe for Work" or "Outrageous" என்ற தலைப்புகளில் வரும் காணொளிகள் உங்கள் நப்பாசையைத் தூண்டி அலைக்கழிக்க வைக்கும் நச்சுக் கிருமிகள். உங்கள் கணினி, கைபேசி ஆகியவற்றின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்து விடும். நச்சு நிரல்கள் ஒருமுறை தாக்கினால்....ஆட்டம் காலி...

அரை,குறை ஆபாசக் காணொளி FaceBook பயனாளர்களை வீழ்த்தும் முக்கியமான ஆயுதம். பெரும்பாலும் இவை விளம்பரக் காணொளிகளாக வந்து ஈர்க்கும். அல்லது போலி இணையத் தளங்கள், Youtube ஆகியவற்றின் வழி வலை விரிக்கும்.

கவர்ச்சியை நம்பி களமிறங்கினால் கவலைகள் கூடலாம். உங்கள் சொந்த நிழற்படங்கள் உருவப்படலாம். தேவையற்ற இடங்களில் நீங்கள் "வருந்துமளவுக்கு" விளம்பர வெளிச்சம் பாய்ச்சப்படலாம். நீங்கள் பார்த்த அதே காணொளியை உங்கள் நண்பர்களும் பார்க்குமாறு அழைப்பு அனுப்பப்படலாம். கொஞ்சம் சபலப்பட்டால், காலம் முழுவதும் சஞ்சலப்பட வேண்டிய நிலை வரலாம்.

("வலை" வீசுவோம்).


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்