Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போராட்டம் நடத்திவரும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களைச் சாடிய இந்தியா

இந்தியாவில் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களைச் சாடியுள்ளது அந்நாட்டு அரசாங்கம்.

வாசிப்புநேரம் -

இந்தியாவில் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களைச் சாடியுள்ளது அந்நாட்டு அரசாங்கம்.

அமெரிக்கப் பாடகி ரிஹானா (Rihanna), பருவநிலை ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் (Greta Thunberg), அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸின் உறவினரான ஆர்வலர் மீனா ஹாரிஸ் ஆகியோர் உழவர்களுக்கு ஆதரவாகச் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்த விவகாரத்தையொட்டி அவசரமாகக் கருத்துரைப்பதற்கு முன், உண்மைக் கருத்துகளையும் ஆராயவேண்டும் என்றும் நிலவரத்தையொட்டி முறையான புரிதலைப் பெறவேண்டும் என்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சு கூறியது.

இந்நிலையில், குடிமக்கள் அனைவரையும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும்படி இந்தியப் பிரபலங்கள் அக்ஷே குமார், அஜெய் தேவ்கன், கரன் ஜோஹர் ஆகியோர் கருத்துரைத்துள்ளனர்.

நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடிய எந்தப் பொய்த்தகவல் மீதும் கவனம் செலுத்தவேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அந்த முயற்சியில் அமைச்சர்களும் சேர்ந்துள்ளனர்.

அவர்களின் Twitter பதிவுகளில் #IndiaAgainstPropaganda என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டுவருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்