Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

எந்த நிறம் எதற்கு உகந்தது?

நிறம் என்று வரும்போது நமக்குப் பிடித்ததை வாங்குகிறோம். விரும்பியதை உடுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு செயலுக்கும்கூட ஒவ்வொரு நிறம் உகந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

வாசிப்புநேரம் -

நிறம் என்று வரும்போது நமக்குப் பிடித்ததை வாங்குகிறோம். விரும்பியதை உடுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு செயலுக்கும்கூட ஒவ்வொரு நிறம் உகந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நல்ல தூக்கத்துக்கு என்ன நிறம்? சிறப்பாகப் படிப்பதற்கும்... நன்கு வேலை செய்வதற்கும் என்ன நிறங்கள் உதவகின்றன?

நாம் அன்றாடம் பல்வேறு நிறங்களைப் பார்க்கின்றோம்.

அவை அழகுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை.

உங்களின் கவனத்தை ஈர்ப்பது அவற்றின் முக்கிய நோக்கம் என்பது தெரியுமா?

உணவகங்கள் என்று எடுத்துக்கொண்டால், அவை சிவப்பு, மஞ்சள் ஆகிய  நிறங்களைப் பெரும்பாலும் கொண்டிருக்கும்.

காரணம், பசியைத் தூண்டும் நிறங்கள் அவை. உணவு உண்ணவேண்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சரிதானே?

வேலைக்குச் செல்லும்போது உடுத்தும் உடைக்கு உகந்த நிறம்? சிறப்பாக வேலை செய்ய பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் சரியானவை. அவை  பளிச்சென இருந்தால், சுறுசுறுப்பு தானாக வரும் என்கிறது ஆய்வு.

 கறும் ஊதா, கறுஞ்சிவப்பு ஆகிய நிறங்கள் சரிப்பட்டு வரமாட்டா.

மாணவர்களுக்கும் உகந்த நிறங்கள் உண்டு. மஞ்சள் கவனத்தைச் சிதையாமல், சிறப்பாகப் படிக்க உதவும்.

ஆரஞ்சு நிறம் விழிப்புடன் இருக்க உதவுகிறது.

பச்சை, ஊதா நிறங்கள் மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ள துணைபுரிகின்றன.

நீலம் என்று பார்த்தால், அது அதிகமாகப் படுக்கையறைகளில் பயன்படுத்தப்படும். காரணம்,  நீல நிற அறையில் உறங்கியவர்களுக்கு நல்ல, இடைவிடாத தூக்கம் கிடைத்தாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

பச்சை, வெளிர் மஞ்சள் ஆகிய நிறங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.        

பழுப்பு, சாம்பல் நிறங்கள், நல்ல நினைவாற்றலுக்கும் கவனத்தோடு செயல்படுவதற்கும் உதவுமாம்.

இறதியாக, ஒரு பொருளை வாங்க எது தூண்டுகிறது தெரியுமா?

கறுப்பு.

அதனால்தான், பெண்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஒப்பனைப் பொருட்கள் கறுப்பு அட்டைகளில், போத்தல்களில் இருக்கும்.

நிறங்கள் சொல்லும் பாடங்கள் இவை மட்டுமல்ல. இன்னும் அதிகம் இருக்கின்றன.  

எது வாங்கினாலும் எங்கு போனாலும் சரியான நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாமே!

அன்புடன்

இலக்கியா செல்வராஜி



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்