Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

புத்தாண்டும் தீர்மானங்களும்

புத்தாண்டு பிறக்கும்போது, புதுத் தீர்மானங்களும் பிறக்கும். புதிய கனவுகள், புதிய ஆசைகள்.

வாசிப்புநேரம் -

புத்தாண்டு பிறக்கும்போது, புதுத் தீர்மானங்களும் பிறக்கும்.

புதிய கனவுகள், புதிய ஆசைகள்.

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொருவருக்கும் விதவிதமான ஆசைகள்.
இந்த ஆண்டும் அவ்வாறு அநேகர் தீர்மானங்களை எடுத்திருப்பர்.



அவற்றை நிறைவேற்றி வெற்றி பெற்றவர்களும் உள்ளனர்.

தீர்மானங்களை ஆரம்பத்தில் உறுதியாகக் கையாண்டு பின்னர் பாதியிலேயே கைவிட்டவர்களும் நம்மிடையே இருக்கவே செய்வார்கள்.

பொதுவாக மக்கள் 2017ஆம் ஆண்டுத் தீர்மானங்களை நிறைவேற்றினார்களா இல்லையா? சில நாட்களுக்கு முன்பு அதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தமிழ்ச் செய்திக்காக மக்களின் கருத்துகளை அறியச் சென்றபோதே அந்த அனுபவம்.

பலர் இவ்வாண்டு நல்லதோர் ஆண்டாக அமைந்தது என என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.

பல பெற்றோருக்கு, பிள்ளைகள் பட்டம் பெற்றதில் மகிழ்ச்சி.



2. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

3. வேலையில் ஒரு முன்னேற்றம் இருக்கவேண்டும். மனநிறைவு கிடைக்கவேண்டும்.

சரி நடந்தது என்ன?

இந்த ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு முறை சுற்றுலாவுக்குச் சென்றேன்.

வரும் ஆண்டுகளில் அதே போல் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பல முறை கடைப்பிடிக்க முயன்றேன். ஆனால் ருசியான உணவிற்கு நான் அடிமை (சிலர் சொல்லமாட்டார்கள். நான் சொல்கிறேன் J)…

அடுத்த ஆண்டில் இந்தத் தீர்மானத்தை மீண்டும் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த ஆண்டு என் தீர்மானங்களையும் தாண்டி பல நல்ல நிகழ்வுகள் நடந்தன.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவில் வேலை செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பு அதில் ஒன்று.

சிறந்த செய்தியாளராகப் பணிபுரிய இது வழி அமைத்துக்கொடுக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.

சில நேரங்களில் வேலையிடத்தில் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலும் அன்பான சக ஊழியர்களின் ஆதரவோடு பலவற்றையும் கற்றுக்கொண்டேன்.

இவ்வாண்டு வீட்டிலும் வெளியிலும் பல புது நட்புகள். பல நல்ல நிகழ்வுகள்... இடையிடையே மனத்தைச் சங்கடப்படுத்திய சில நிகழ்வுகளும் நடந்தன.

ஜூன் மாதம், எதிர்பாரா இரட்டைச் சம்பவங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

தந்தைக்கு மாரடைப்பு.

தாத்தா காலமானார்.

இரு சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்தன.

தந்தையின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு கவலைப்படுவதா, தாத்தாவின் இறப்பை நினைத்து அழுவதா எனக் குழும்பிய நேரம் அது.

ஆனால், அதையும் கடந்து வந்தேன்.

இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதானே வாழ்க்கை...

இப்போது தந்தையின் உடல் நலத்தில் வீட்டில் உள்ள அனைவரும் அதிக அக்கறை காட்டுகிறோம்.

தாத்தா, நிம்மதியான நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்துகிறோம்.

சிக்கல்கள் நேரிட்டபோதும், அவற்றையெல்லாம் சமாளித்து ஆண்டிறுதிக்கு வந்துவிட்டோம்.
பல அனுபவங்களும் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்தன.

துயரம் ஏற்பட்டாலும் துவண்டுபோகாமல், நம்பிக்கையைக் கைவிடாமல் மன உறுதியுடன் செயல்பட இந்த அனுபவங்கள் எல்லாம் அடித்தளங்கள்.

இன்னும் சில மணிநேரத்தில் 2018 பிறந்துவிடும்.

வரும் ஆண்டு அனைவருக்கும் இன்னும் இன்னும் வளம் சேர்க்கும் நல்லதோர் ஆண்டாக அமையவேண்டும் என்பது என் ஆசை.

புதிய தீர்மானங்களுடன் புத்தாண்டை வரவேற்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்