Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

ஏதோ நினைவுகள்...

மனதும் பழைய காலத்தை எண்ணத் தொடங்கிவிடும்... எல்லோருக்கும் இருக்கும் இப்படி ஏதாவது ஓர் அனுபவம்... 

வாசிப்புநேரம் -

“நான் சிங்கப்பூருக்குப் போறேன், எதாவது வாங்கணுமா?”

இப்படித்தான் என் அம்மாவும் அப்பாவும் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.

நாங்கள் செம்பவாங் வட்டாரத்தில்தான் குடியிருந்தோம்.

மத்திய வட்டாரப் பகுதியைத்தான் அவர்களும் பெரும்பாலான தமிழர்களும் ‘சிங்கப்பூர்’ என அழைத்தார்கள். 

சிராங்கூன் பகுதிக்குச் செல்வோர், “நான் சிராங்கத்துக்குப் போகணும்” அல்லது “தேக்காவுக்குப் போறேன்” என்பார்கள்.

சிலரோ “ஆறாங்கல்லுக்குப் போறியா” எனக் கேட்பார்கள்.

அந்தக் காலக்கட்டத்தில் செம்பவாங் வட்டாரத்தை எவரும் செம்பவாங் என அழைத்ததில்லை.

‘பதிமூணு’ என்றும் ‘பதின்மூன்றாம் கல்’ (13th Mile) என்றுமே அது பரவலாக அழைக்கப்பட்டது.

இது எப்படி நேர்ந்தது? அதைப் புரிந்துகொள்ள, சிங்கப்பூரின் தொடக்க காலத்தில் அதன் சாலைகள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

தற்போது ஃபுல்லர்ட்டன் ஹோட்டலாக இருக்கும் அன்றைய பொது அஞ்சல் நிலையமே தொடக்க இடமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அங்கிருந்து தொடங்கி, அனைத்துச் சாலைகளும் மைல் அளவைக் கொண்டு பிரிக்கப்பட்டன. மைல்கற்கள் நாட்டப்பட்டன.

(படம்: தேசிய ஆவணக் காப்பகம்

அதனால் அங்கு 16 மைல் அளவைக் குறிக்கும் மைல்கல் நாட்டப்பட்டது.

ஆக அண்மையில், 2014ஆம் ஆண்டில், கேலாங் லோரோங் 6க்கும் 8க்கும் இடையே, மரத்தால் மறைக்கப்பட்டிருந்த மைல்கல் கண்டெடுக்கப்பட்டது. 

‘செம்பவாங் கேட்’ என அழைக்கப்படும் கடற்படைத் தளத்தின் நுழைவாயிலுக்கு வெளியில்தான், 13½ மைல்கல் இருந்தது.

தற்போதைய அட்மிரால்டி ஈஸ்ட்டுக்கும் செம்பவாங் ரோட்டுக்கும் இடையே அது அமைந்திருந்தது.

அருகில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நடந்து வருவதே வழக்கம். 

தளத்தில் பணிபுரியும் வெளியாட்கள், வேலைக்கு வரும்போதும் வேலை முடிந்து வீடு திரும்பும்போதும் படையாக சைக்கிள் ஓட்டிச் செல்வதைப் பார்க்க முடியும்.

அதேபோல், தளத்தில் வசிப்பவர்களும் வெளியில் செல்வதற்கும் பேருந்துகளுக்காக நிறைய நேரம் காத்திருக்கவேண்டியிருந்த காலம் அது.

மனதில் பசுமையாகப் பதிந்த இடங்களில், பழைய செம்பவாங் சந்தைக்கு அருகே அமைந்திருந்த இந்தப் பேருந்து நிறுத்தமும் அடங்கும். அந்த வட்டாரத்திலேயே முழுமையாக கான்கிரீட்டால் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் அது மட்டுமே.

இன்று எங்கு பார்த்தாலும் கான்கிரீட்டாக இருக்கிறது.

இருந்தாலும் பேருந்து நிறுத்தத்தைப் பார்க்கும்போதெல்லாம் அந்தப் பழைய பேருந்து நிறுத்தம் நினைவுக்கு வந்துவிடும்.

மனதும் பழைய காலத்தை எண்ணத் தொடங்கிவிடும்... எல்லோருக்கும் இருக்கும் இப்படி ஏதாவது ஓர் அனுபவம்... 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்