பேசுவோமா

Images
  • social media
    (படம்: Pixabay)

தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரியாத தகவல்கள்

நமது வாழ்வில் நடப்பவற்றை உடனடியாக உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவிக்க இப்போது வசதி உண்டு.


இப்படித்தான் காலையில் நான் கண்விழித்தேன்

என்று கூறியபடி ஒரு படம்.இதுதான் என் மதிய உணவு... நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?

என்ற கேள்வியுடன் ஒரு படம் அல்லது உணவைக் காட்டும் ஒரு சிறு காணொளி.


அதிகமாகப் பயன்படுத்தப்படும் வலைத்தளங்களில் நொடிக்கு நொடி பலரும் தங்கள் அன்றாட நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்வதுண்டு.


திருமணம் செய்துகொண்டால் hashtag-உடன் பல தகவல்கள், படங்கள், காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அதிகம் தொடர்பில்லாத உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நம் வாழ்வில் நடப்பவற்றைப் பற்றி தகவல் அளிக்க அது உதவுகிறது.

நானும் அப்படித்தான் செய்துவந்தேன்... அண்மைக் காலம் வரை.

மற்றவர்கள் பதிவேற்றம் செய்யும் படங்களையோ காணொளிகளையோ நாம் விமர்சிப்பதுண்டு.

நல்ல விமர்சனமாகவும் அது இருக்கலாம்.

கேட்கத்தகாத விமர்சனமாகவும் அது இருக்கலாம்.

நல்ல விமர்சனங்களை நாம் வரவேற்கிறோம்.

கேட்கத்தகாத விமர்சனங்கள் நம்மைக் காயப்படுத்தலாம்.

அத்தகைய காயம் தேவையா?

தேவையே இல்லை என்று நான் முடிவெடுத்தேன்.

நான் பதிவேற்றம் செய்த அனைத்துப் படங்களையும் இயன்றவரை வலைத்தளங்களில் இருந்து அகற்றினேன்.

நெருக்கமானவர்களுடன் மட்டுமே எனது வலைத்தளங்களில் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளேன்.

இப்போது நான் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் அவர்களை மட்டுமே சென்றுசேர்கின்றன.

இது எனக்கு ஒருவகை நிம்மதியைத் தருகிறது.

எனது கருத்துகளையும் என் எண்ணங்களையும் எனக்கு நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்வது, இந்தத் திறந்த இணையவெளியில் எனக்கு ஒருவகை பாதுகாப்பையும் தருகிறது.

இது என் முடிவு.
உங்கள் முடிவு உங்கள் கையில்...


அன்புடன்
மோகனா
 

Top