Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

தமிழில் பேசலாமே !

இளையர்கள் பலர் இன்று விடுக்கும் குற்றச்சாட்டு: வேலையிடத்தில் தமிழ் பேச வாய்ப்புகள் இல்லை. அதனால் தமிழில் தொடர்ந்து பேச எங்களால் முடியவில்லை.

வாசிப்புநேரம் -
தமிழில் பேசலாமே !

(படம்: உறுமி தமிழ் மின்னிதழ் மற்றும் சிங்கப்பூர் புத்தக மன்றம்)

இளையர்கள் பலர் இன்று விடுக்கும் குற்றச்சாட்டு: வேலையிடத்தில் தமிழ் பேச வாய்ப்புகள் இல்லை. அதனால் தமிழில் தொடர்ந்து பேச எங்களால் முடியவில்லை.

எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்யும் இளைஞர்கள் பலரிடமும் இதே பிரச்சினைதான்.

பள்ளித் தேர்வுகளில் தமிழில் சிறப்பாகச் செய்திருப்பார்கள்; அதிலும் உயர் தமிழில் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார்கள். ஆனால் இவர்கள் நேர்முகத் தேர்வுக்கு வரும்பொழுது தமிழில் பேசச் சிரமப்படுகிறார்கள்.

இடையில் என்ன ஆனது?

மாணவர்கள் பள்ளியை முடித்துவிட்டுப் பட்டம் பெற்று வேலைக்குச் செல்லும்போது மொழியுடன் இருக்கும் தொடர்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர்.

தாய்மொழியில் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லாமையால் இயல்பாகவே அது நடக்கிறது.

அன்றாடம் நாம் தமிழ் பேசும் பலரைச் சந்திக்கறோம். ஆனால் அவர்களிடம் தமிழில் பேசுகிறோமா?

நீங்கள் நண்பர்களைச் சந்திக்கும்போது தமிழில் பேசலாமே.
நீங்கள் உணவகங்களுக்குச் செல்லும்போது கடைக்காரரிடம் தமிழில் பேசலாமே.

உங்கள் வேலையிடத்தில் வேலைசெய்யும் பாதுகாவலர் தமிழராக இருந்தால் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் தமிழில் பேசலாமே.
நீங்கள் வசிக்கும் கூட்டுரிமை வீடுகளில் வேலைசெய்யும் பாதுகாவலரிடம் தமிழில் பேசலாமே.

மொழி பேசுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன; அவற்றைப் பயன்படுத்த நாம்தாம் தவறிவிடுகிறோம்.

உங்கள் வாக்கியத்தில் சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் முக்கியமாகத் தமிழ் மொழியைப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

அந்த ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான தமிழ் வார்த்தைகள் என்ன என்பதைப் பிறகு அறிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக, மொழியைக் கேளுங்கள்.

குழந்தைகள் கேட்பதைக் கற்றுக்கொள்வார்கள். பிள்ளைகள் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் பெற்றோரிடமும் சுற்றியுள்ளவர்களிடமும் கேட்டுக் கற்றுக்கொள்கின்றனர்.

பேச்சாளர்களின் உரைகளைக் கேளுங்கள்; வானொலி, தொலைக்காட்சி, மின்னிலக்க ஊடகங்களின் வழி, செய்தி, நடப்பு விவகார நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்.

இணையத்தில் ஒலிப்பதிவுகளைக் (podcasts) கேட்கலாம் அல்லது ஒலி மின்னூல்களைக் கேட்கலாம் - அதன் வழி வாசிக்கும் முறையையும் கற்றுக்கொள்ளலாம்.

மூன்றாவதாக மொழியைப் படிக்க வேண்டும். ஆனால் அதற்காக இலக்கியக் காப்பியங்களைப் படிக்கவேண்டும் என்றில்லை.

எளிய புத்தகங்களைப் படிக்கலாம். செய்திகளைப் படிக்கலாம். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதைப் படிக்கலாம்.

வாசிப்பதால் உங்கள் சொல்லகராதி விரிவடையும். அதனால் உங்கள் தன்னபிக்கை உயரும்; தமிழில் பேசுவதற்குப் புது நம்பிக்கை பிறக்கும்.

படம்:மோகன் ராஜ் 

நீங்கள் மொழியை நேசித்தால், அதற்காக எதையும் செய்ய விரும்புவீர்கள். ஆனால் அந்த அளவுக்குப் போக வேண்டாம். நாம் அனைவரும் இன்று ஒன்று மட்டும் செய்தால் போதும்.
தமிழில் பேசலாமே!


அன்புடன்,


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்