Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

ராஜாவும் நீங்களே மந்திரியும் நீங்களே…

ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நிர்வாகக் குழு, ஊழியர்கள், நிறுவனத்துக்கான இலக்கு, அவற்றை எட்டுவதற்குத் திட்டங்கள் இருக்கும்..

வாசிப்புநேரம் -
ராஜாவும் நீங்களே மந்திரியும் நீங்களே…

(படம்: Pixabay)

சஹீரா பேகம்: 

ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.


அதில் நிர்வாகக் குழு, ஊழியர்கள், நிறுவனத்துக்கான இலக்கு, அவற்றை எட்டுவதற்குத் திட்டங்கள் இருக்கும்..


சரியானவர்களைப் பணியில் வைத்துத் திட்டமிட்டுச் செயல்பட்டால் இலக்கை நிச்சயமாக அடைந்துவிடலாம்.


நடைமுறைகளை அவ்வப்போது பரிசீலித்து, அவற்றை மேம்படுத்தி, தகுதியுள்ளவர்களை வேலைக்கு அமர்த்தி, கடுமையாக உழைக்கும் ஊழியரைத் தட்டிக்கொடுத்து, பின்தங்கும் ஊழியரைத் தூக்கிவிட்டு, வேலை செய்யப் பிடிக்காதவர்களிடம் பேசி காரணத்தைக் கண்டறிந்து, அவர்களையும் ஊக்கப்படுத்தி, சீர்குலைக்கும் வேலையில் ஈடுபடுவோரைக் கண்டித்து, தகுந்த நடவடிக்கை எடுத்து...


இப்படி பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்..
எல்லாம் நிறுவனத்தின் நன்மைக்கே.. அதன் வளர்ச்சிக்கே..


அப்படித்தானே வாழ்க்கையும்?


“You are the CEO of your life” என்ற வாசகத்தைக் கேட்டதுண்டா?


உங்கள் வாழ்க்கை லட்சியங்கள், அதனை நீங்கள் அடைய வைத்திருக்கும் திட்டங்கள், யார் உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள், உங்கள் வாழ்க்கைக்குள் யாரை நுழையவிடுகிறீர்கள், யாரை நிரந்தரமாக வெளியேற்றுகிறீர்கள்..

 

இவையெல்லாம் முற்றிலுமாக உங்கள் கைகளில்.


உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு நீங்கள் வகுக்கும் வாழ்க்கைப் பாதைகள் இவை.

 

சில நேரங்களில் உங்கள் சுய மரியாதைக்காகவும் மன நிம்மதிக்காகவும் எடுக்கவேண்டிய முடிவுகளாகக் கூட இவை அமையலாம்.


தேவை ஏற்படும்போது மட்டும் உறவாடும் உறவினர்கள், அவ்வப்போது கடன் பெற்றுத் திரும்பத் தராத நண்பர்கள், உங்களுக்குக் கிடைக்கும் வெற்றிக்குப் போலியாக வாழ்த்துக் கூறும் நபர்கள்.. இவர்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து தள்ளிவையுங்கள். தப்பில்லை..


மனிதவளத்தைத் தவிர்த்து ஒரு நிறுவனத்தில் நிதி, விளம்பரம், பொதுநலன், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும் இருக்கும்.


ஒவ்வொன்றின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினால்தான் அந்த நிறுவனம் ஒட்டுமொத்தமாகச் சிறப்பாகச் செயல்படும், செழிப்படையும்.


அதைப் போலவே முழுமையான மேம்பாட்டுக்குரிய முயற்சிகளை வாழ்விலும் எடுத்தாகவேண்டும்.


உங்கள் நிறுவனத்திற்காக எடுக்கும் முடிவுகள் பற்றி நிர்வாகக் குழுவிடம் நடத்தும் ஆலோசனையைப் போல, குடும்பத்தார், நெருங்கிய, நம்பிக்கையான நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். தெளிவு பிறக்கலாம்.

 

உங்கள் முடிவுகளைச் சிலர் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம்.

 

யாருக்கும் பதில் கூறவேண்டும் என்ற அவசியம் இல்லை.
வாழ்க்கைச் சபையில் நீங்களே ராஜா.. நீங்களே மந்திரி.

 

அன்புடன்,
சஹீரா பேகம்
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்