Images
  • ninaivil nindrathu

பறவைகள் தஞ்சம் புக ஒதுக்கப்பட்ட இயற்கை சதுப்பு நிலம்

இயற்கையாக அறிவியல், புவியியல் போன்றவற்றைக் கற்பதற்குரிய நடுவமாக...வனவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் புகலிடமாக...இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடமாக ....சுற்றுலாத் தலமாக....திகழ்வதற்காக பாதுகாக்கப்பட்ட இடம், சுங்கை புலோ இயற்கைப் பூங்கா.

சிங்கப்பூரின் முதல் ஈரநில இயற்கைச் சதுப்பு நிலப் பகுதியான சுங்காய் புலோ 1993ஆம் ஆண்டு இன்றைய தினம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

நியோ தியூ கிரசெண்டில் சுமார் 202 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள சதுப்பு நிலப் பகுதி, 1890களிலேயே பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதியாக அடையாளம் காணப்பட்டது.

1986இல் பறவைகளைக் கண்காணிக்கும் ரிச்சர்ட் ஹேல் என்பவர் ஜொகூர் நீரிணையிலிருந்து பறவைக்கூட்டம் ஒன்று சுங்கை புலோ நோக்கிப் பறப்பதைக் கண்டார். அதுவரை அத்தகைய காட்சியைக் கண்டதில்லை என்றார் அவர்.

பின்னர் நிபுணர்களுடன் நடந்த சந்திப்புகளில் அந்தப் பகுதிக்கு மேலும் பறவைகளை எப்படி ஈர்க்கலாம் என்று கலந்துரையாடப்பட்டது.

பறவைகள் அடைக்கலம் நாடுவதற்கான பகுதி அங்கு ஒதுக்கப்பட்டது. நாளடைவில் இயற்கைப் பூங்காவும் அங்கு சேர்க்கப்பட்டது.


Top