Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோருக்கு ஆதரவாக பெருநடை நிகழ்ச்சி

உடற்குறையுள்ளோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று காலை பெருநடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: உடற்குறையுள்ளோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று காலை பெருநடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.

Community Chest Heartstrings Walk நிகழ்ச்சியில் சுமார் 8,000 பேர் கலந்துகொண்டனர்.

சமூகச் சேவை தொண்டூழியர்களோடு 50 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிக்குக் கைகொடுத்தனர். அவர்களில் உடற்குறையுள்ளவர்கள், மூத்தோர், எளிதில் பாதிப்புள்ளாகக்கூடிய இளையோரும் இருந்தனர்.

பெருநடை நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக குடும்பக் கேளிக்கை விழாவும் இடம்பெற்றது. அதில் குடும்பங்கள், மாற்றுத் திறன் கொண்டவர்களுடன் உறவாடுவது பற்றிய மிகை மெய் நிகர் புதிர்போட்டியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி மெரினா பே சாண்ட்ஸில் நடைபெற்றது. அந்தக் கட்டத்தின் 57 மாடிகளை ஏறிச்செல்லும் Sky Vertical போட்டியும் நடைபெற்றது.
அதில் பங்குபெற்றவர்கள், Pathlight சிறப்பு தேவையுடையோருக்கான பள்ளியைச் சேர்ந்த மாணவர் வடிவமைத்த டீ சட்டையை அணிந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் சமூதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர், அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக திகழவேண்டும் என்பது முயற்சியின் நோக்கம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்