Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொண்டூழியர்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் கௌரவ விருது

இந்து அறக்கட்டளை வாரியம் முதன்முறை வழங்கும் "சிறப்பு விருது", மீடியாகார்ப் செய்தியின் முன்னைய செய்தியாளர் அமரர் எட்டிக்கன் சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

இந்து அறக்கட்டளை வாரியம் வழங்கும் "சிறப்பு விருது", மீடியாகார்ப் செய்தியின் முன்னைய செய்தியாளர் அமரர் எட்டிக்கன் சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.

இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்திருந்த தொண்டூழியர் பாராட்டு விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது.

One Farrer ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் மொத்தம் 62 தொண்டூழியர்களுக்கு நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்து அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை வாரியம் ஆகியவற்றிலும் திரு.சண்முகம் தொண்டூழியராகச் சேவையாற்றினார். தம்முடைய உண்மையான உழைப்பால் அவர் தனித்துவமாகத் திகழ்ந்ததாக இந்து அறக்கட்டளை வாரியம் பாராட்டியுள்ளது.

திரு.சண்முகம், எப்போதும் சமுதாய நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததாக அவருடைய மனைவி திருமதி. சரோஜா தேவி தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற தாதிமை அதிகாரி அமரர் A.E மாணிக்கத்திற்கும் "சிறப்பு விருது" வழங்கப்பட்டது. அவர் எண்பது வயதிலும் துடிப்புடன் மருத்துவத் தொண்டூழியராய்ப் பணியாற்றியதாக வாரியம் தெரிவித்தது.
திரு.மாணிக்கம் துடிப்பு மிக்கவர் என்றும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றல் உள்ளவர் என்றும் வாரியம் புகழாரம் சூட்டியது.

excellence award எனப்படும் உயர்நிலை விருதைப் பெற்றவர்களில் ஒருவர் திரு S. சந்திரசேகரன்.

ஆண்டுதோறும் நிகழும் தீமிதித் திருவிழாவில் அவருடைய பங்களிப்பைப் பாராட்டி அந்த விருது வழங்கப்பட்டது.

மேலும், இந்து அறக்கட்டளை வாரியத்தின் தோழமை விருது, திரு பீட்டர் டான் யோங் குவானுக்கும் மஹா கருணா பெளத்தச் சங்கத்திற்கும் வழங்கப்பட்டது.

1999 இல் தொடங்கப்பட்ட விருது, இதுவரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்