Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உயர் விழிப்புநிலை இரண்டாம் கட்டம் - வர்த்தகங்களுக்கு 1.1 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஆதரவுத் தொகுப்புத் திட்டம்

உயர் விழிப்புநிலை இரண்டாம் கட்டம் நடப்புக்கு வந்துள்ளதால் பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கு, 1.1 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை, நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

உயர் விழிப்புநிலை இரண்டாம் கட்டம் நடப்புக்கு வந்துள்ளதால் பாதிக்கப்படும் வர்த்தகங்களுக்கு, 1.1 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

வாடகைதாரர்களுக்கு வாடகையில் கழிவு வழங்க, சொத்து உரிமையாளர்களில் சிலர் தயாராக இல்லை என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, சொத்து உரிமையாளர்கள், அரசாங்கம், தகுதிபெறும் வாடகைதாரர்கள்-ஆகிய தரப்புகள், வாடகைக் கழிவில் பங்கேற்கும் முறைகுறித்து நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது.

உயர் விழிப்புநிலை இரண்டாம் கட்டத்தால்
பாதிக்கப்படும் வர்த்தகங்களின் ஊழியர்களுக்கு, வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் 60 விழுக்காட்டுச் சம்பள ஆதரவு கிடைக்கும்.

உணவு-பானக் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், உடலுறுதி நிலையங்கள், நிகழ்த்துகலை அமைப்புகள், கலைக் கல்வி நிலையங்கள்-ஆகியவற்றுக்கு அது பொருந்தும்.

அடுத்த மாதம் 18-ஆம் தேதிவரை 60 விழுக்காட்டு ஆதரவும், அதன் பிறகு 31-ஆம் தேதிவரை 10 விழுக்காட்டு ஆதரவும் வழங்கப்படும்.

டாக்சி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கான வேலை ஆதரவுத் திட்டம், செப்டம்பர் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் வாகனம் ஒன்றுக்கு, ஓட்டுநர்கள், நாள் ஒன்றுக்கு 10 வெள்ளி ஆதரவு நிதி ஒதுக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் அது, 5 வெள்ளியாகக் குறையும்.

தேசியச் சுற்றுப்புற அமைப்பின்கீழ் செயல்படும் சந்தை மற்றும் உணவங்காடி நிலையக் கடைகள் ஒவ்வொன்றுக்கும், 500 வெள்ளி ரொக்க உதவி நிதி ஒரு முறை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்