Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோசடியில் $1.4 மில்லியன் இழந்ததாகச் சொன்ன பெண் கைது

மோசடிச் சம்பவத்தில் 1.4 மில்லியன் வெள்ளி இழந்ததாகக் காவல்துறையிடம் புகார் செய்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
மோசடியில் $1.4 மில்லியன் இழந்ததாகச் சொன்ன பெண் கைது

(படம்: TODAY)


மோசடிச் சம்பவத்தில் 1.4 மில்லியன் வெள்ளி இழந்ததாகக் காவல்துறையிடம் புகார் செய்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த 42 வயது பெண் அந்தத் தொகையைத் தாம் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து களவாடிய சந்தேகத்தில் காவல்துறை அவரைக் கைதுசெய்துள்ளனர்.

பணத்தையும், மதிப்புமிக்க பொருள்களையும் பெற இணைய நண்பருக்கு 1.4 மில்லியன் வெள்ளி பணம் அனுப்பிவைத்துள்ளதாக பெண் காவல்துறையிடம் கூறியிருந்தார்.

ஆனால் பணமும் பொருளும் பெண்ணை வந்தடையவில்லை.

பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கணக்கு நிர்வாகியாகப் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து 1,426,718 வெள்ளி களவாடியது தெரியவந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பெண்ணின் மீது நம்பிகை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்