Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீடமைப்புப் பேட்டைகளை மேம்படுத்தும் பணிகளுக்காக ஒரு பில்லியன் வெள்ளி செலவு

சிங்கப்பூரில், வீடமைப்புப் பேட்டைகளை மேம்படுத்தும் பணிகளுக்காக, ஒரு பில்லியன் வெள்ளிக்கும் அதிகமானத் தொகையை அரசாங்கம் செலவிடவுள்ளது.

வாசிப்புநேரம் -
வீடமைப்புப் பேட்டைகளை மேம்படுத்தும் பணிகளுக்காக ஒரு பில்லியன் வெள்ளி செலவு

(படம்: TODAY)


சிங்கப்பூரில், வீடமைப்புப் பேட்டைகளை மேம்படுத்தும் பணிகளுக்காக, ஒரு பில்லியன் வெள்ளிக்கும் அதிகமானத் தொகையை அரசாங்கம் செலவிடவுள்ளது.

நிலையற்ற உலக வர்த்தகச் சூழலில், உள்கட்டமைப்புத் துறையின் உற்பத்தி அளவை உயர்த்தும் நோக்கில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

1987க்கும், 1997க்கும் இடைபட்ட காலகட்டத்தில் கட்டப்பட்ட 55ஆயிரம் தகுதிபெறும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள் மேம்படுத்தப்படும்.

HIP எனும் வீடு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

முன்னதாக, 1986ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட புளோக்குகள் மட்டும் அந்தத் திட்டத்தில் இடம்பெற்றன.

மேம்பாட்டுத் திட்டங்களை வகுப்பதற்கு முன், குடியிருப்பாளர்கள், கட்டுமான நிபுணர்களிடம் கருத்து திரட்டப்படும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

பரந்த தென் நீர்முகப்பு திட்டம் நீண்டகால முயற்சி என்பதால், அதற்கான வடிவமைப்பு பரிந்துரைகளை முன்வைக்க இளையர்கள் முன்வரவேண்டும் என்றார் அவர்.

Singapore Together இயக்கம் குறித்து நடைபெறும் கலந்துரையாடல் தொடரில் திரு. வோங் பேசினார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்