Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வயது குறைந்தோருக்கு சிகரெட்டுகளை விற்ற 10 சில்லறை வர்த்தகர்களின் புகையிலை உரிமம் ரத்து

வயது குறைந்தோருக்கு சிகரெட்டுகளை விற்றதற்காக 10 சில்லறை வர்த்தகர்களின் புகையிலை உரிமத்தை 6 மாதத்திற்கு ரத்து செய்துள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
வயது குறைந்தோருக்கு சிகரெட்டுகளை விற்ற 10 சில்லறை வர்த்தகர்களின் புகையிலை உரிமம் ரத்து

படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

வயது குறைந்தோருக்கு சிகரெட்டுகளை விற்றதற்காக 10 சில்லறை வர்த்தகர்களின் புகையிலை உரிமத்தை 6 மாதத்திற்கு ரத்து செய்துள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. 18 வயதிற்குக் குறைந்த வாடிக்கையாளர்களுக்கு அந்தக் கடைகள் சிகரெட்டுகளை விற்றன.

வாடிக்கையாளரின் அடையாள அட்டையைக் கேட்டு வயதைச் சரிபார்க்கமால் சிகரெட்டுகளை விற்பனையாளர்கள் விற்றுள்ளனர்.

அந்த சில்லறை வர்த்தகக் கடைகளின் விவரங்கள் இதோ:

1. ஹாவ் மார்ட் (505 கான்பரா லிங்க்)

2. ஹாவ் மார்ட் (323 டா சிங் ரோடு)

3. M R பாசிர் ரிஸ் மினிமார்ட் (230 பாசிர் ரிஸ் ஸ்டிரீட் 21)

4. NYK மினிமார்ட் (365B அப்பர் சிராங்கூன் ரோடு)

5. நூர் சூப்பர்மார்ட் (468 ஹோகாங் அவென்யூ 8)

6. ரசூல் மினிமார்ட் (108 பிடோக் ரெசர்வோயர் ரோடு)

7. சாய் மார்ட் (144 டெக் வை லேன்)

8. MCP ஃபேர்மார்ட் (135 ஜூரோங் கேட்வே ரோடு)

9. சென்னை ஸ்டோர் (456 ஜூரோங் வெஸ்ட் ஸ்டிரீட் 41)

10. லக் செங் காப்பிக் கடை ( 115 புக்கிட் மேரா வியூ)

10 கடைக்காரர்களுக்கும் அது முதல் குற்றம் என ஆணையம் தெரிவித்தது. கண்காணிப்பு, அமலாக்க நடவடிக்கைகள் மூலம் விற்பனையாளர்கள் பிடிபட்டனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்