Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாதியர் மெச்சத்தக்க சேவை விருது 100 தாதியர்களுக்கு வழங்கப்பட்டது

தாதிமைத் துறையில் சிறந்து விளங்கும் 100 பேருக்கு இன்று "தாதியர் மெச்சத்தக்க   சேவை விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாதியர் மெச்சத்தக்க சேவை விருது 100 தாதியர்களுக்கு வழங்கப்பட்டது

(படம்: AFP/Nicolas Asfouri)

தாதிமைத் துறையில் சிறந்து விளங்கும் 100 பேருக்கு இன்று "தாதியர் மெச்சத்தக்க சேவை விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறப்பாக பணியாற்றுதல், பணி தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்களில் பங்குபெறுதல், தாதிமைத் தொழிலின் சிறப்புக்குப் பங்களித்தல் போன்றவற்றின் அடிப்படையில் அந்த விருதுகள் வழங்கப்பட்டன.

சிங்கப்பூரில் 1976ஆம் ஆண்டு முதல் அந்தச் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

தாதியர்கள் தாங்கள் பணிபுரியும் சுகாதார நிலையங்களால் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவர். அதன் பிறகு சுகாதார அமைச்சின் குழு, விருதுக்குரிய 100 பேரைத் தேர்ந்தெடுக்கும்.

விருது வெல்லும் தாதியர் ஒவ்வொருவருக்கும் சீருடையில் அணியக்கூடிய பதக்கமும், 1,000 வெள்ளி ரொக்கமும் வழங்கப்படும்.

இந்த ஆண்டுடன் சிங்கப்பூரில் தாதியர் பணி தொடங்கி 135ஆண்டுகள் ஆகின்றன.

2013ஆம் ஆண்டு 36,000 பேர் சிங்கப்பூரில் தாதியர்களாக இருந்தார்கள் தற்போது அந்த எண்ணிக்கை 42,000 க்கும் மேல் உயர்ந்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்