Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: முறையான ஒப்புதல் இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 11 ஊழியர்களுக்கு நிரந்தரத் தடை

சீனா சென்று திரும்பும் வேலை அனுமதி அட்டை கொண்ட ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறையை மீறிய 11 பேருக்கு சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: முறையான ஒப்புதல் இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 11 ஊழியர்களுக்கு நிரந்தரத் தடை

(படம்: Jeremy Long/ CNA)

சீனா சென்று திரும்பும் வேலை அனுமதி அட்டை கொண்ட ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறையை மீறிய 11 பேருக்கு சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சு அத்தகவலை வெளியிட்டுள்ளது.

வேலை அனுமதி அட்டை கொண்ட ஊழியர்கள் கடந்த 14 நாள்களில் சீனா சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்ப விரும்பினால் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் மனிதவள அமைச்சின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பிப்ரவரி 7 அன்று அந்தப் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.
அதை மீறிய 11 ஊழியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய வேலை அனுமதி அட்டைகள் மீட்டுக்கொள்ளப்பட்டன; அவர்கள் மீண்டும் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் இனி சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களுடைய முதலாளிகளின் வேலை அனுமதி அட்டை விண்ணப்பச் சலுகைகளும் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகள் அறிமுகம் கண்டதிலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 220 விண்ணப்பங்களைப் பெறுவதாகவும், 500 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்