Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஓட்டுநரில்லா மின்னியல் பேருந்து - நன்யாங் தொழில்நுட்பப் பல்கலை சோதித்துப் பார்க்கும்

கூடிய விரைவில் ஓட்டுநரில்லா மின்னியல் பேருந்தில் நீங்கள் பயணம் செய்ய முடியும்.

வாசிப்புநேரம் -

கூடிய விரைவில் ஓட்டுநரில்லா மின்னியல் பேருந்தில் நீங்கள் பயணம் செய்ய முடியும்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வோல்வோ (Volvo) நிறுவனத்துடன் இணைந்து அதற்கான சோதனைகளை அடுத்த ஆண்டில் இருந்து நடத்தவுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற பேருந்துகளை நம் சாலைகளில் பார்ப்பது வழக்கமான ஒன்றாகக்கூடும்.

40 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய அத்தகைய 2 பேருந்துகளை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலை சோதித்துப் பார்க்கவுள்ளது. அந்தப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் இருக்கமாட்டார்கள். அவை தாங்களாகவே இயங்கக்கூடியவை.

எதிரே வரும் தடைகளை உணர்வதற்கான கருவிகளின் உதவியுடன் அவற்றைத் தாண்டிச் செல்ல இந்தப் பேருந்துகளால் முடியும். டீசலைப் பயன்படுத்தும் பேருந்துகளைக் காட்டிலும் மின்னியல் பேருந்துகளுக்கு 80 விழுக்காடு குறைவான சக்தி தேவைப்படுவதாய் வோல்வோ நிறுவனம் விளக்கியது.

மின்னியல் பேருந்துகளை வாங்குவதற்கு செலவு அதிகம் என்றாலும் அவற்றை சேவையில் ஈடுபடுத்தும் செலவு குறைவு என்பதை அது சுட்டியது. அந்தச் சோதனைகளை நடத்துவதற்கு SMRT நிறுவனமும் ஆதரவளிக்கவுள்ளது.

ஓட்டுநரில்லா மின்னியல் பேருந்துகள் சாலைகளில் பாதுகாப்பான முறையில் செலுத்தப்படலாமா என்பதை உறுதிசெய்வதில் SMRT உதவும்.
SMRT நிறுவனத்தின் பராமரிப்புச் சேவை நிலையத்தில் ஒரு பேருந்து சோதிக்கப்படும்.

சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்த பிறகு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்