Images
  • NK SG

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட இரு நிறுவனங்கள் வடகொரியாவுக்கு ஆடம்பரப் பொருட்களை விற்கின்றன: BBC

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட இரு நிறுவனங்கள், ஐக்கிய நாட்டு நிறுவனத் தடைகளை மீறி, வடகொரியாவுக்கு ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்ததாய் BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
உலக நிறுவனத்தின் அறிக்கை நகலை மேற்கோள்காட்டி இன்று காலை அந்தத் தகவல் வெளியானது. OCN, T Specialist - இரண்டும், ஒரே இயக்குநரைக் கொண்ட நிறுவனங்கள்.

மதுபானங்கள் உள்ளிட்ட பல ஆடம்பரப் பொருட்களை அந்த நிறுவனங்கள் வடகொரியாவுக்கு விற்பனை செய்ததாய்க் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆக அண்மை விற்பனை சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.

2 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் 2011ஆம் ஆண்டுக்கும், 2014ஆம் ஆண்டுக்கும் இடையில் விற்கப்பட்டதாய் உலக நிறுவன அறிக்கை கூறுகிறது.

நிறுவனங்களின் வடகொரிய வங்கிக் கணக்கிலிருந்து சிங்கப்பூர் வங்கிக் கணக்குக்கு அந்தத் தொகை மாற்றிவிடப்பட்டுள்ளது. உலக நிறுவனத் தடைகளின் கீழ், வடகொரியாவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும்.

Top