Images
  • crowdsourcing
      

Crowdsourcing என்றால் என்ன?

பொதுமக்களிடையே சில்லறை வர்த்தகப் பொருள்களின் விலைவாசி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க Crowdsourcing தளங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று (ஜூலை 10) நாடாளுமன்றத்தில் கூறினார்.

Crowdsourcing என்றால் என்ன?

பெரும் எண்ணிக்கையில் மக்கள் கருத்துகளைத் திரட்டுவது Crowdsourcing எனப்படுகிறது. ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணவோ ஒரு திட்டத்துக்குக் கருத்துகள் வழங்கவோ Crowdsourcing பயன்படுகிறது. பொதுமக்கள் தங்கள் எண்ணங்களை, திறன்களை அல்லது பணத்தை ஒரு இணையத்தளம் வாயிலாகச் சமர்ப்பிப்பது Crowdsourcing எனப்படுகிறது. வெவ்வேறு துறைகள் இந்த Crowdsourcing முறையைக் கொண்டு தகவல் திரட்டலாம். அவ்வாறு திரட்டப்படும் ஆக்ககரமான தகவல்கள் செயல்முறைப்படுத்தப்படும்.


(படம்: ideas.ecitizen.gov.sg) 

Crowdsourcing என்பது எவ்வாறு செய்யப்படுகிறது?

சமூக ஊடகங்கள், இணையப்பக்கங்கள் வாயிலாக Crowdsourcing செய்யப்படுகிறது. Kickstarter, GoFundMe போன்றவை பிரபல நிதிதிரட்டும் Crowdfunding இணையத்தளங்கள். சிங்கப்பூர் அரசாங்கம் eCitizens Ideas! எனும் Crowdsourcing தளத்தை இவ்வாண்டு தொடங்கியது. இந்த இணையத்தளத்தில் அனைத்து அரசாங்க அமைப்புகளும் தங்கள் திட்டங்களுக்கு Crowdsourcing வழியாகக் கருத்துகள் சேகரிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கருத்துகளுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. Crowdsourcing மூலமாக பொதுமக்கள் நாட்டின் சவால்களைக் கையாள்வதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சிங்கப்பூரில் Crowdsourcing செய்யப்பட்ட திட்டங்கள்.

2016 - பொதுமக்கள் Crowdsourcing மூலம் பேருந்துப் பாதைகளைத் தெரிவுசெய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. கூட்டம் நிறைந்த பொதுப் போக்குவரத்தைத் தவிர்க்க விரும்பும் பயணிகளைத் தனியார் பேருந்துச் சேவைகளுடன் இணைத்தது தகவல், தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தின் Beeline செயலி.

2017 - தேசியத் தொண்டூழிய, கொடை நிலையம் Give.sg எனும் Crowdfunding இணையத்தளத்தின் மூலம் சுமார் 26 மில்லியன் வெள்ளி நிதி திரட்டியது. 417 அறநிறுவனகளுக்கு அந்த நிதி சென்றுசேர்ந்தது. 


தொடர்புடையவை:

உங்கள் கருத்து

Top