Images
  • ninaivil nindrathu

எஸ்பிளனேட் கலை மண்டபத்தில் முதலில் அரங்கேறிய நிகழ்ச்சி?

11 அக்டோபர் 2002

மரினா பே வட்டாரத்தில் கலை நிலையமாக விளங்குகிறது, எஸ்பிளனேட்.

1,600 இருக்கைகள் கொண்ட கலை மண்டபம், 2,000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், கலைப்படைப்புகளுக்கான சிறிய பகுதிகள் போன்றவை எஸ்பிளனேட்டில் உள்ளன.

சுமார் 513 மில்லியன் வெள்ளி செலவில் கட்டப்பட்ட எஸ்பிளனேட் கலை மண்டபத்தின் முதல் படைப்பை, 2002ஆம் ஆண்டு இன்றைய தினம், சிங்கப்பூர் பல்லிய இசைக் குழு அரங்கேற்றியது.

மறுநாள் வாணவேடிக்கையோடு கோலாகலமாக எஸ்பிளனேட் திறந்துவைக்கப்பட்டது.

23 நாட்களுக்குத் தொடர்ச்சியாக அங்கு கலைநிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.

22 நாடுகளைச் சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நிகழ்ச்சிகளைப் படைத்தனர்.


Top