Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தகவல், தொடர்புத் தொழில்நுட்பத் துறையில் 12,000 வேலை வாய்ப்புகள்

தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறையில் 12,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தகவல், தொடர்புத் தொழில்நுட்பத் துறையில் 12,000 வேலை வாய்ப்புகள்

(படம்: AFP/Roslan Rahman)

தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறையில் 12,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில் 95 விழுக்காடு, நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கான வேலைகள்.

வளர்ந்துவரும் மின்னிலக்கப் பொருளியலை வலுப்படுத்தும் நோக்கில் அந்த வேலை வாய்ப்புகள்
SG United வேலை, திறன் திட்டத்தின்-கீழ் இடம்பெற்றுள்ளன.

அண்மை வேலை நிலவரம் குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு அதனைத் தெரிவித்தது.

2015ஆம் ஆண்டு முதல், அந்தத் துறையில் 17,000 உள்ளூர்வாசிகள் சேர்ந்துள்ளனர்.

இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, அந்தத் துறையில் சுமார் 190,000 பேர் பணியாற்றுகின்றனர்.

அவர்களில் 70 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்