Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காததற்காக Twelve Cupcakes நிறுவனத்திற்கு $119,500 அபராதம்

7 வெளிநாட்டு ஊழியர்களுக்கு, உரிய சம்பளத்தை அளிக்காததற்காக, Twelve Cupcakes நிறுவனத்திற்கு 119,500வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காததற்காக Twelve Cupcakes நிறுவனத்திற்கு $119,500 அபராதம்

(படம்: Facebook/Twelve Cupcakes)

7 வெளிநாட்டு ஊழியர்களுக்கு, உரிய சம்பளத்தை அளிக்காததற்காக, Twelve Cupcakes நிறுவனத்திற்கு 119,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் கீழ், 15 குற்றச்சாட்டுகளை அந்த நிறுவனம் சென்ற மாதம் ஒப்புக்கொண்டது.

மேலும் 14 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

நிறுவனம் 2016ஆம் ஆண்டு புதிய உரிமையாளருக்குக் கைமாறியது.

அதன் பிறகு, 2016ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2018ஆம் ஆண்டு நவம்பர் வரை அந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு, ஒப்புக்கொள்ளப்பட்டதை விட மிகக் குறைவாகச் சம்பளம் அளிக்கப்பட்டது.

நிறுவனத்துக்கு வாதாடிய வழக்கறிஞர்கள், நிறுவனம் அதன் முன்னாள் உரிமையாளர்களின் வழக்கத்தைப் பின்பற்றியதாகக் கூறியது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அத்தகைய குற்றங்களைக் கண்டறிவது கடினம் என்றும் அதன் மூலம் நிறுவனம் லாபமடைந்தது என்றும் கூறினார்.

எனினும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களின் முழுச் சம்பளமும் திருப்பிக் கொடுக்கப்பட்டதை அவர் சுட்டினார்.

நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்களான டேனியல் ஓங் (Daniel Ong), ஜேமி தியோ (Jaime Teo) ஆகியோர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், வேலை அனுமதி அட்டை நிபந்தனைகளை மீறிய குற்றம் ஒவ்வொன்றுக்கும் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறையோ, 10,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்