Images
  • Asian Lung

ஆசியர்களின் நுரையீரல் புற்றுநோய்க் கட்டிகளுக்குச் சிகிச்சையை எதிர்க்கும் சக்தி அதிகம்

ஆசியர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்றுநோய்க் கட்டிகள் சிகிச்சையின் போது எதிர்ப்புச் சக்தியை அதிகம் வெளிப்படுத்துகின்றன. சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அதைப் புலப்படுத்துகிறது.

A-STAR அமைப்பின் மரபணு ஆய்வுக் கழகமும், தேசியப் புற்றுநோய் நிலையமும் அந்த ஆய்வை மேற்கொண்டன.

வெள்ளை இனத்தவருடன் ஒப்பிடும்போது ஆசிய நோயாளிகளுக்கு ஏற்படும் கட்டிகள் மேலும் சிக்கலாகவும், மரபியல் ரீதியாக வேறுபட்டவையாகவும் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

ஆசிய நோயாளிகளிடையே காணப்படும் நுரையீரல் புற்றுநோய், ஒரு குறிப்பிட்ட மரபணு மாற்றத்தின் மூலம் வகைப்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள நுரையீரல் புற்றுநோயாளிகளில் 50 விழுக்காட்டினரிடம் இந்த மரபணு மாற்றம் காணப்படுகிறது. அந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து பலனளிக்கவில்லை அல்லது அவர்களுக்குப் மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைக் குறைக்கப் பல்வேறு உத்திகளையும் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதை மருத்துவர்கள் புரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவும் எனக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்து

Top