Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் கொண்ட படகில் போலியாகப் பறக்கவிடப்பட்ட சிங்கப்பூர்க் கொடி

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, சென்ற புதன்கிழமை இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து நிறுத்திய கடத்தல் படகு சிங்கப்பூர் கொடியைப் பறக்கவிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, சென்ற புதன்கிழமை இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து நிறுத்திய கடத்தல் படகு சிங்கப்பூர் கொடியைப் பறக்கவிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது. அந்த மீன் பிடிப் படகு, ஒரு டன் எடை கொண்ட போதைப் பொருளைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

Shun De Man 66 எனும் அந்தப் படகு தைவானில் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்தோனேசிய அதிகாரிகள் அதனைத் தடுத்து நிறுத்தியபோது, அது Sunrise Glory எனும் போலிப் பெயருடன், சிங்கப்பூர் கொடியையும் பறக்கவிட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சிங்கப்பூர் நீரிணையின் இந்தோனேசியக் கடற்பகுதியில் அந்தப் படகு நுழைந்தபோது, சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகு அதனை அடையாளம் கண்டது.

பின்னர் சிங்கப்பூருக்கும், பாத்தாமுக்கும் இடையில் அதிகாரிகள் அந்தப் படகைத் தடுத்து நிறுத்தினர். அதில் இருந்தவர்களிடம் ஆவணங்களின் நகல்கள் மட்டுமே இருந்தன.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் சந்தேகிக்கப்பட்டனர். கடந்து செல்லும் நாட்டின் கொடியை அவர்கள் பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்பட்டது.
படகைச் சோதனையிட்ட அதிகாரிகள், 41 அரிசி மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளைக் கண்டுபிடித்தனர்.

இந்தோனேசிய அதிகாரிகளின் விசாரணை தொடர்வதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்