Images
  • 30 NOV NS allowance increase (1)
    கோப்புப் படம். (படம்: TODAY)

முழுநேர தேசிய சேவையாளர்களுக்கான புதிய வேலை - கற்றல் திட்டம்

முழுநேர தேசிய சேவையாளர்கள் இவ்வாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து வேலை - கற்றல் இணைய நிபுணர் திட்டத்தை மேற்கொள்ளலாம்.

முழுநேரப் படைவீரர்களின் சம்பளத்தை ஈட்டும் அதே வேளையில் நிபுணத்துவச் சான்றிதழ்களைப் பெற அது வகைசெய்யும். அதன் தொடர்பில் தற்காப்பு அமைச்சின் இணையத் தற்காப்பு அமைப்பிற்கும் சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே இன்று இணக்கக் குறிப்பு கையெழுத்தானது.

இணையத் தொழிற்பயிற்சிகளில் இருக்கும் அனைத்து முழுநேர தேசிய சேவையாளர்களும் புதிய இணைய முழுநேர தேசிய சேவையாளர் திட்டத்தின் கீழ் வருவர் என இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

கடுமையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் ராணுவ வீரர்களுக்கு இணைய நிபுணர் விருது வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படுவோர் 3 அல்லது 4 ஆண்டு பயிற்சிக் காலத்தைத் தெரிவுசெய்து பகுதி நேர வகுப்புகளுக்குச் செல்லலாம்.

சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தகவல் பாதுகாப்புப் பட்டப் படிப்பிற்கான மதிப்பெண்களை அதன்மூலம் அவர்கள் பெறுவர். தீங்கு விளைவிக்கும் மென்பொருள் பற்றிய பகுப்பாய்வு, இணையத் தடயவியல் ஆகியவற்றையும் அவர்கள் கற்றுக்கொள்வர்.

மேம்பட்ட நிபுணத்துவப் பயிற்சியை முழுநேர தேசிய சேவையாளர்கள் பெறுவதற்கு 3 முதல் 4 ஆண்டு தேவைப்படுகிறது.

Top