Images
  • Tuas C

கடப்பிதழ் சோதனை இயந்திரத்தின் மீது மோதிய ஓட்டுநர்

துவாஸ் சோதனைச் சாவடியில் கடப்பிதழ் சோதனை இயந்திரத்தின் மீது 49 வயது ஆடவர் தனது காரை மோதிய சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தச் சம்பவம் கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்ததாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

மோட்டார் சைக்கிள்களுக்கான தடத்தில் காரைச் செலுத்திய ஆடவரிடமிருந்து மதுபான வாடை வீசியதாக ஆணையம் கூறியது.

முறைதவறி நடக்கும் அத்தகைய ஓட்டுநர்களின் செயல்களைக் கடுமையாகக் கருதுவதாக ஆணையம் சொன்னது.

Top